×

ஆப்கானிஸ்தான் வீரரை பேட்டால் அடிக்க முயன்ற பாகிஸ்தான் வீரர்; நேற்றைய போட்டியில் பரபரப்பு

சார்ஜா: பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி, ஆப்கானிஸ்தான் வீரர் பரீத் அகமதுவை பேட்டால் அடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆசிய கோப்பை டி20 தொடரில் நேற்று சார்ஜாவில் நடந்த சூப்பர் 4 சுற்றில் கடைசி ஓவரில் ஆப்கானிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் திரில் வெற்றிபெற்றது. போட்டியில் பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி, ஆப்கானிஸ்தான் வீரர் பரீத் அகமதுவை பேட்டால் அடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆட்டத்தின் 19வது ஓவரில் பரீத் பந்துவீச்சில் சிக்சர் அடித்த ஆசிப் அலி, அடுத்த பந்திலேயே ஆட்டம் இழந்தார். விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பரீத் ஆவேசமாக கத்திய நிலையில், ஆத்திரம் அடைந்த ஆசிப் அலி, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, தனது பேட்டையும் ஓங்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், நடுவர்களும் சக வீரர்களும் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்….

The post ஆப்கானிஸ்தான் வீரரை பேட்டால் அடிக்க முயன்ற பாகிஸ்தான் வீரர்; நேற்றைய போட்டியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Afghanistan ,Sharjah ,Asif Ali ,Pareet Ahmed ,Dinakaran ,
× RELATED கனமழை காரணமாக துபாய், ஷார்ஜா சாலைகளில் வெள்ளப்பெருக்கு!