×

நீட் தேர்வின் தற்காலிக பின்னடைவை கண்டு பயப்பட வேண்டாம்: மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை..!

சென்னை: நீட் தேர்வின் தற்காலிக பின்னடைவை கண்டு பயப்பட வேண்டாம் என நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை வழங்கினார். நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வின் முடிவுகளானது நேற்று அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் 51.30 சதவிதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து 1,32,167 பேர் நீட் தேர்வு எழுதிய நிலையில், 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 51.3% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெயிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; நீட் தேர்வில் பல பெரிய மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்ற தமிழக மாணவர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் நீட் தேர்வில் வெற்றி பெறாத தேர்வாளர்கள் தற்காலிக பின்னடைவை மேம்பட்ட உத்திகள், வலுவான உறுதிப்பாடு மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றால் போராடி வெற்றி பெறவும், மாணவர்கள் பயப்பட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்….

The post நீட் தேர்வின் தற்காலிக பின்னடைவை கண்டு பயப்பட வேண்டாம்: மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை..! appeared first on Dinakaran.

Tags : Governor ,R.R. N.N. Ravi ,Chennai ,R. N.N. Ravi ,R.R. N.N. Ravi Advice ,Dinakaran ,
× RELATED பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பாதை...