ஆனந்த விமான நிலையம்

வேங்கடமலையில் நிவாசன் எழுந்தருளியிருக்கும் விமானத்திற்கு ஆனந்த நிலைய விமானம் என்று பெயர். உயர்ந்த ஆனந்தத்தை உடையவனாக இருப்பதாலும், இதற்குமேல் வேறொரு ஆனந்தம் இல்லாத சொரூபத்தை உடையவராகவுமிருப்பதால் அவர் உறைந்துள்ள விமானத்திற்கு ஆனந்த நிலையம் என்றுபெயர். தான் மட்டும் ஆனந்தமாக இல்லாது தன்னோடு சம்பந்தப்பட்டிருக்கும் அனைவரையும் தன்னுடைய நிலைக்கு உயர்த்திதன் ஆனந்தத்தை அளிப்பதாலும் இப்பெயர் ஏற்பட்டது. விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில்  ஆனந்த என்றொரு நாமம் உண்டு. மேலும், விமானம் என்கிற பதத்திற்கு அளவில்லாதது என்றொரு பொருளுமுண்டு. பகவானுடைய கலைகளில் ஒரு கலை விமானத்தில் இருப்பதாக ஆகம சாத்திரங்கள் பேசுகின்றன. இம்மையிலும் மறுமை

யிலும் வேண்டியதை தருவதால் இவரை மஹா ஆனந்த மூர்த்தி என்பார்கள்.

 - மகி

Related Stories:

>