×

ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் லஞ்சம்: லஞ்சத்தில் அனைவருக்கும் பங்கு இருப்பது அம்பலம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனை பணியாளர் லஞ்சம் பெரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டாரத்தில் விபத்தில் உயிரிழப்பவர்கள் முதல் கொலை, தற்கொலை மற்றும் சந்தேக மரணம் வரை உயிரிழந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்படும். அங்கு பிணவறையில் பணி செய்யும் மருத்துவமனை ஊழியர் டில்லிபாபு உடற்கூறாய்வு செய்ய 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு பணம் பெரும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. லஞ்சமாக பெரும் பணம் தமக்கு மட்டுமில்லை மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று டில்லிபாபு பேசுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. எனவே பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் கூட்டு கொள்ளை நடப்பதாக கூறப்படுகிறது. …

The post ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் லஞ்சம்: லஞ்சத்தில் அனைவருக்கும் பங்கு இருப்பது அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Sribruthur Government Hospital ,Sripurudur ,Sripurudur Government Hospital ,Sriperudur Government Hospital ,
× RELATED பிரபல ரவுடியின் கூட்டாளிகள்...