×

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடைபெறும் நவராத்திரி விற்பனை கண்காட்சி மற்றும் அமுதப் பெருவிழா சிறப்பு மலர்: அமைச்சர் பெரியகருப்பன் வெளியீடு

சென்னை: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடைபெறும் சாராஸ் மேளா மற்றும் நவராத்திரி விற்பனைக் கண்காட்சியினை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்து 75வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா சிறப்பு மலரை வெளியிட்டார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், சென்னை, கலைவாணர் அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சாரஸ் மேளா மற்றும் நவராத்திரி விற்பனைக் கண்காட்சியினை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் நேற்று துவக்கி வைத்து, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள  75வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா சிறப்பு மலரை வெளியிட்டார்.இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் அமுதா, பெருநகர சென்னை மாநகராட்சி பிரியா, பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் எம்.மகேஷ் குமார், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திவ்யதர்சினி,  தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் பிரியங்கா பங்கஜம்,  கூடுதல் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்தக் கண்காட்சியில், பல மாநிலங்களை சேர்ந்த தனிச்சிறப்பு வாய்ந்த கலம்காரி, தாசர், சாந்தேரி மற்றும் பாக் பிரிண்ட், பந்த் புடவைகள் உள்ளிட்ட பல்வேறு ஆடை வகைகளும், முத்து நகைகள், மண், கண்ணாடி வேலை மற்றும் டோரி வேலை பொருட்கள், பழங்குடியின நகைகள், சன்னபட்னா பொம்மைகள், சபாய் புல் பொருட்கள், பனை ஓலை ஒவியங்கள், வீட்டு அலங்கார பொருட்கள் உள்ளிட்ட பல்வகையான பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.இக்கண்காட்சியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களான செய்யப்படுகிறது. மேலும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத துணிப்பைகள், மஞ்சப்பைகள் விற்பனை செய்யும் அரங்குகளும்  அமைக்கப்பட்டுள்ளன. நேற்று முதல் 18ம் தேதி வரை நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சி வளாகத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விளையாட்டுகள் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த  இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம்….

The post தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடைபெறும் நவராத்திரி விற்பனை கண்காட்சி மற்றும் அமுதப் பெருவிழா சிறப்பு மலர்: அமைச்சர் பெரியகருப்பன் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Minister Periyakurappan ,Navratri Sale Exhibition ,Amaru Festival Special Flower ,Tamil Nadu Women's Development Institute ,Chennai ,Saras Mela ,Navratri Sales Exhibition ,Tamil Nadu Women's Development Institute for Rural Development ,Navaratri Sale Exhibition ,Aaliyapa Festival Special Flower ,Minister ,Periyakarupan ,
× RELATED நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார்...