×

அர்ஜுன் சம்பத் கைது

திண்டுக்கல்: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘இந்திய ஒற்றுமை பயணம்’ என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மொத்தம் 150 நாட்கள் நடைபயணம் மேற்கொள்கிறார். கன்னியாகுமரியில் இன்று மாலை தொடங்கும் இந்த நடைபயணத்திற்காக, நேற்று இரவு சென்னை வந்த அவர், இன்று காலை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தந்தை ராஜீவ் காந்தியின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்ற அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு சென்றார். இந்த நிலையில் கன்னியாகுமரிக்கு வருகை தரும் ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என இந்து மக்கள் கட்சியின் நிறுவனரான அர்ஜுன் சம்பத் கூறியிருந்தார். மேலும் ‘கோ பேக் ராகுல்’ என்ற முழக்கத்தோடு இந்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவித்திருந்த அவர், கோவையில் இருந்து கன்னியாகுமரிக்கு நேற்று இரவு ரயிலில் புறப்பட்டார். நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர் கோவை செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலை 1 மணியளவில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் அர்ஜுன் சம்பத்தை, போலீசார் கைது செய்தனர். பின்னர் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, அவரிடம் விசாரணை நடத்தினர்….

The post அர்ஜுன் சம்பத் கைது appeared first on Dinakaran.

Tags : Arjun Sambat ,Rakul Gandhi ,All India Congress Party ,Kannyakumari ,Indian Unity Journal ,
× RELATED சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தடையை...