×

மர்மமான முறையில் குவியல் குவியலாக இறந்து கிடக்கும் பிராய்லர் கோழிகள்-நோய் தொற்று பரவும் அபாயம்

திட்டக்குடி : திட்டக்குடி அருகே வெள்ளாற்றில் மர்மமான முறையில் குவியல் குவியலாக இறந்து கிடக்கும் பிராய்லர் கோழிகளால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள ஆவினங்குடி அருகே உள்ள வெள்ளாற்றில் குவியல் குவியலாக பிராய்லர் கோழிகள் இறந்து கிடக்கின்றன. இந்த பிராய்லர் கோழிகளை மர்ம நபர்கள் வெள்ளாற்றில் வீசி சென்றுள்ளனர். இதனால் தற்போது அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் அவ்வழியாக பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்துக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். ஒரே சமயத்தில் ஏராளமான கோழிகள் இறந்தது எப்படி அல்லது கோழிகள் நோய் தொற்று ஏற்பட்டு இறந்ததா அல்லது வேறு ஏதேனும் தொற்று நோய் காரணமாக இறந்து, இப்பகுதியில் வீசி சென்றார்களா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்கள் கோழிகளை நாலாபுரமும் இழுத்து சென்று போடுவதால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மர்மமான முறையில் கோழிகளை ஆற்றில் வீசி சென்றவர்கள் யார் என்று கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இறந்து கிடக்கும் கோழிகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும், நீர்நிலைகளில் அசுத்தம் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post மர்மமான முறையில் குவியல் குவியலாக இறந்து கிடக்கும் பிராய்லர் கோழிகள்-நோய் தொற்று பரவும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Thittakudi ,Vellaari ,Dinakaran ,
× RELATED சந்தனத்தின் மருத்துவ குணங்கள்!