×

மிக்சிங் காதலுக்கு பர்த்டே

சென்னை: பிரெண்ட்ஸ் பிக்சர்ஸ், ஸ்ரீ ஐயப்பா மூவிஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘மிக்சிங் காதல்’. மக்கள் மனதில் இத் திரைப்படத்தின் பாடல்கள் தமிழ் கனடா இரு மொழிகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் ‘சேலத்து மாம்பழம்’ என்ற பாடல் கனடாவிலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இசை வெளியீட்டு விழாவில் பெப்சி தலைவர் இயக்குனர் ஆர்.கே. செல்வமணி இந்தப் பாடல் மிக சிறப்பாக இருக்கிறது என்றும் நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல பாடல் கேட்டு ரசித்தேன் என்றும் பாராட்டியிருக்கிறார்.

இந்த பாடலில் நடனமாடிய சம்ஹிதா வின்யா ஹீரோயினிக்கு இன்று பிறந்தநாள். படக்குழு அவரை வாழ்த்தியுள்ளது. வித்தியாசமான காதல் கதை கொண்ட இப்படம் உண்மை சம்பவம் அடிப்படையிலே உருவாக்கப்பட்டது. இயக்கம், என்.பி. இஸ்மாயில். கதாநாயகனாக சிண்டோ, திவ்யா பாவனா பிரியங்கா, அம்பானி சங்கர், மகாலிங்கம், கண்ணன் மற்றும் பலர் இணைந்து நடித்திருக்கிறார்கள். படத்தின் ஒளிப்பதிவு சாதிக் கபீர். ராஜேஷ் மோகன், கொணேஷ்வரன் இணைந்து இசையமைத்துள்ளார்கள். மே மாதம் படம் திரைக்கு வருகிறது.

Tags : Chennai ,Friends Pictures ,Sri Ayyappa Movies ,Canada ,
× RELATED சவால் விட்ட பிரபாஸ் பட இயக்குனர்