×

கன்னிகைபேர் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள்; எம்எல்ஏ வழங்கினார்

பெரியபாளையம்: கன்னிகைபேர் பெரியபாளையம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்று மிதிவண்டிகளை வழங்கினார். எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகைபேர் மற்றும் பெரியபாளையம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 293 மாணவ, மாணவிகளுக்கு அரசின் விளைவில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி கன்னிகைபேர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கன்னிகைபேர் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளருமான சத்தியவேல் தலைமை வகித்தார். ஒன்றிய துணைச் செயலாளர் டி.கே.முனிவேல், ஊராட்சி செயலாளர் கே.வி.வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அனைவரையும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பேரன்புச்செல்வி, சம்பத் ஆகியோர் வரவேற்றனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்துகொண்டு 293 மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் நிர்வாகிகள் அன்பு, உதயகுமார், செல்வகுமார், பிரேம்ராஜ், முருகன், மணிகண்டன், பழனி, தனிகாசலம், சுரேஷ், தினேஷ், அக்கரை ரஞ்சித், விஜய், ராஜ் குமார், பக்தவச்சலம், ஐ.ஏழுமலை உட்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் ரமேஷ் குமார் நன்றி கூறினார்….

The post கன்னிகைபேர் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள்; எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Virgo Government School ,Periyapalayam ,Kummipipundi ,MLA ,Kangipir Periyapalayam Rasinar secondary school ,
× RELATED பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில்...