×

துபாய் கடத்த முயன்ற ரூ.50 லட்சம் கரன்சி பறிமுதல்; 4 பேர் கைது

மீனம்பாக்கம்: சென்னையிலிருந்து  துபாய்க்கு ரூ.50 லட்சம் கரன்சி கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் இருந்து மஸ்கட் செல்லும் ஓமன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னை, ராமநாதபுரம் பகுதிகளை சேர்ந்த 4 பயணிகள் மஸ்கட் வழியாக, துபாய் செல்ல வந்திருந்தனர். அவர்களுடைய உடமைகளை சோதனை செய்தபோது, கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர் மற்றும் யூரோ கரன்சி மற்றும் வெளிநாட்டு பணம் மறைத்து வைத்திருந்தனர். அதன் மதிப்பு ரூ.50 லட்சம். அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து அவர்கள்  பயணத்தை ரத்து செய்தனர். அவர்கள் 4 பேரும் சன்மானத்துக்காக வெளிநாட்டிற்கு பணத்தை கடத்த முயன்றது தெரியவந்தது. அவர்களிடம் பணம் கொடுத்தனுப்பிய ஆசாமி யார், என்று அதிகாரிகள் தீவிரமாக விசாரிக்கின்றனர்….

The post துபாய் கடத்த முயன்ற ரூ.50 லட்சம் கரன்சி பறிமுதல்; 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Dubai ,Meenambakkam ,Chennai ,
× RELATED சென்னை- துபாய் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்