×

மகள் ஸ்ரீமதி, குடும்பம் குறித்து யூடியூப் சேனல் அவதூறு: டிஜிபி அலுவலகத்தில் தாய் புகார்

சென்னை: தமிழக காவல் துறை இயக்குநர் அலுவலகத்தில் பள்ளியில் இறந்த ஸ்ரீ மதியின் தாய் செல்வி நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எனது மகள் கடந்த 12.7.2022ம் தேதி கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியால் கொலை செய்யப்பட்டார். எனது மகளின் இறப்பில்  மர்மங்கள் உள்ளன. எனது மகளின் இறப்பை பற்றி பல்வேறு ஊடகங்களில் ஊடகவியலார்கள் பேசி வருகின்றனர். கேடிவி யூடியூப் சேனலில் கார்த்திக் பிள்ளை என்பவர் என் இறந்த மகளை பற்றி மிகவும் தவறாகவும், பொய்யான தகவலை கூறி வருகிறார். மேலும், என்னை பற்றியும் என் குடும்ப வாழ்க்கை பற்றியும் மிகவும் அவதூறாக பேசி வருகிறார். இவர் பல வீடியோக்கள் அவதூறாக  வெளியிட்டுள்ளார். இதனால் நானும் என் கணவர் ராமலிங்கமும் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளோம். என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய கார்த்திக் பிள்ளையை கைது செய்து அவரது யூடியூப் சேனலை முடக்க வேண்டும். …

The post மகள் ஸ்ரீமதி, குடும்பம் குறித்து யூடியூப் சேனல் அவதூறு: டிஜிபி அலுவலகத்தில் தாய் புகார் appeared first on Dinakaran.

Tags : YouTube ,DGP ,Chennai ,Sri Mathi ,Tamil Nadu Police ,
× RELATED தன் மீது அவதூறு கருத்து பரப்புவோர்...