×

உத்திரமேரூர் அருகே புனித ஆரோக்கிய அன்னை ஆலய விழா தொடக்கம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த கருவேப்பம்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட மடம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 322ம் ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி நேற்று மாலை ஆலய வளாகத்தில் புதியதாக அமைக்கப்பட்ட கொடி கம்பத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவில், செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயர் நீதிநாதன் கலந்து கொண்டு தன்னார்வலர் செல்வம் ஆலய வளாகத்தில் அமைத்து கொடுத்த புதிய கொடிக்கம்பத்தில் புனித ஆரோக்கிய அன்னை உருவம் பொறிக்கப்பட்ட கொடியினை ஏற்றி, ஆலய வளாகத்தில் சிறப்பு பிராத்தனை நிகழ்ச்சி நடந்தது. கொடியேற்றத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா நாட்களில் தினமும் இரவு சிறப்பு திருப்பலி நடைபெறும். கடைசி நாளான 8ம் தேதியன்று திருதேர் வீதியுலா நடைப்பெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை மல்லிகாபுரம் பங்கு தந்தை வினோத்ராஜ், அமுதாசெல்வம் உட்பட விழா குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர். …

The post உத்திரமேரூர் அருகே புனித ஆரோக்கிய அன்னை ஆலய விழா தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Holy Mother of Health Shrine Festival ,Uttaramerur ,Uthramerur ,Matham ,Karuveppambundi ,Panchayat ,Uthramerur.… ,Phutha Arogya Anai temple festival ,
× RELATED கோயில்களில் பணம், நகை கொள்ளை