×

ஊத்தங்கரை அருகே இரும்பு கயிறு அறுந்து சேதமடைந்த பாம்பாறு அணை மதகு சீரமைப்பு-7 நாளுக்குள் முழு கொள்ளளவை எட்டும் என தகவல்

ஊத்தங்கரை : ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை மதகுகள் சீரமைப்பு பணி நிறைவடைந்த நிலையில், 7 நாட்களுக்குள் அணை முழு கொள்ளளவை எட்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த மாரம்பட்டி ஊராட்சியில், பாம்பாறு அணை உள்ளது. இந்த அணையின் மூலம் 4,000 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்த வாரம் அணையின் 4ம் மதகின் கதவு பழுதடைந்ததால், இரும்பு கயிறு அறுந்து கதவு திறந்தது. இதனால் விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் வெளியேறியது. கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையை நேரில் ஆய்வு செய்தனர். கலெக்டர் உத்தரவின் பேரில், உடனடியாக மதகை சீரமைக்கும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று பாம்பாறு அணை மதகு முழுவதுமாக சீரமைக்கப்பட்டது. தற்போது பாம்பாறு அணைக்கு திருப்பத்தூர் ஆண்டிப்பனூர் அணை உபரிநீரும், ஜவ்வாது மலை மற்றும் பெனுகொண்டாபுரம் ஏரி உபரிநீரும் வந்து கொண்டுள்ளது. இதன்காரணமாக, இன்னும் 7 நாட்களுக்குள் பாம்பாறு அணை முழு கொள்ளளவை எட்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்….

The post ஊத்தங்கரை அருகே இரும்பு கயிறு அறுந்து சேதமடைந்த பாம்பாறு அணை மதகு சீரமைப்பு-7 நாளுக்குள் முழு கொள்ளளவை எட்டும் என தகவல் appeared first on Dinakaran.

Tags : Bambaru ,Uthangarai ,Dinakaran ,
× RELATED பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை