×

அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கிராமப்புற மருத்துவ சேவை மையம்-அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்

திருக்கோவிலூர் : திருவண்ணாமலை  நகரில் சிறப்பு  வாய்ந்த  கல்வி  நிறுவனங்களை நடத்தி வரும் ஜீவா  கல்வி  அறக்கட்டளை  மருத்துவத்துறையில்  ஏழை,  எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சிறந்த  மருத்துவ சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் 24மணிநேர உயர்தர அதிநவீன பல்நோக்கு மருத்துவ கல்லூரி  மருத்துவமனையாகவும் நடுத்தர ஏழை எளிய  மக்களுக்கு  தங்கள் பிணிகளைப் போக்கும் மருத்துவமனையாகவும் திகழும் அருணை மருத்துவக்  கல்லூரி  மருத்துவமனை  தொலைதூர கிராமப்புற  ஏழை  எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கள்ளக்குறிச்சி  மாவட்டம்  மணலூர்பேட்டை  அடுத்த  கூவனூர்  கிராமத்தில் அருணை  மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கிராமப்புற மருத்துவ மையம்  திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி  மாவட்ட  ஆட்சியர்  ஷ்ரவன்குமார் ஜடாவத்  தலைமை வகித்தார்.  சங்கராபுரம் சட்டமன்ற  உறுப்பினர் உதயசூரியன், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற   உறுப்பினர் மணிக்கண்ணன் ஆகியோர்  முன்னிலை  வகித்தனர் . கள்ளக்குறிச்சி  தெற்கு  மாவட்ட செயலாளரும்  ரிஷிவந்தியம்  சட்டமன்ற  உறுப்பினருமான  வசந்தம் கார்த்திகேயன்  வரவேற்புரையாற்றினார்.  சிறப்பு  அழைப்பாளராக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள்  துறை அமைச்சர் எ.வ. வேலு திறந்து  வைத்து  சிறப்புரை  ஆற்றினார்.அப்போது  அவர்  பேசியதாவது:  நமது உடலில் உள்ள உறுப்புகளில் கண்கள் எவ்வாறு முக்கியமானதோ அது போல்  திருவண்ணாமலை மற்றும்  கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் பாதுகாப்பு இரு கண்கள் போன்றது. மக்களுக்கு  அடிப்படை வசதி  தேவை  என்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் கூவனூர் கிராமப்புற மருத்துவ மையமாகும். நலிவோடு  வருபவர்கள்  நலமோடு  திரும்புவார்கள்  என்ற  வாக்கியத்திற்கு இணங்க  இம்மருத்துவ  மையம்  இயங்கும். 24 மணி  நேரமும்  மருத்துவர்கள் மருத்துவ  சேவை  இருக்கும். அருணை மருத்துவமனையின் சிறப்புகள் அவசர சிகிச்சை பிரிவு, 300 படுக்கை கொண்ட அதிநவீன மருத்துவமனை, சிடி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி, பல்நோக்கு மருத்துவ வசதி, மகப்பேறு மருத்துவ சிகிச்சை, இருதய பிரிவு,  பிரசவத்திற்கு ரூ.18 ஆயிரம் தமிழ்நாடு முதலமைச்சர் திட்டத்திற்கு வழங்கப்படுகிறது என்றார்.அருணை  மருத்துவக்  கல்லூரி  துணைத்  தலைவர்  எ.வ.குமரன்,  மருத்துவக் கல்லூரி  இயக்குனர்  எ.வ.வே.கம்பன்,  சிஇஓ சுஷ்மா,  முதல்வர்  குணசிங், கண்காணிப்பாளர்  குப்புராஜ் .  மணலூர்பேட்டை  பேரூராட்சி தலைவர் ரேவதி  ஜெய்கணேஷ்  திருக்கோவிலூர்  ஒன்றிய  சேர்மன் அஞ்சலாட்சி  அரசகுமார்  ஒன்றிய  செயலாளர்கள்  அரியூர்  ராஜேந்திரன், பூமாரி  கிருஷ்ணமூர்த்தி, செட்டி  தாங்கள்  அய்யனார்,  பெருமாள், பாரதிதாசன்,  கள்ளக்குறிச்சி  மாவட்ட சேர்மன்  புவனேஸ்வரி  பெருமாள் , மாவட்ட  அறங்காவலர்  குழு  தலைவர் பாலாஜி  பூபதி  மற்றும் மருத்துவர்கள்,  செவிலியர்கள்,  மருத்துவமனை  நிர்வாகிகள்  ஊழியர்கள் கலந்து  கொண்டு  சிறப்பித்தனர்….

The post அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கிராமப்புற மருத்துவ சேவை மையம்-அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Rural Medical Service Centre ,Minister ,Arunya Medical College Hospital ,A. Etb. Velu ,Tirukovilur ,Jeva Education Foundation ,Tiruvanna Nagar ,Arunya Medical College Hospital, ,Etb. Velu ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...