×

இலங்கையில் சிக்கிய சிவகார்த்திகேயன் படக்குழுவினர்: பாஸ்போர்ட் பறிமுதல்

சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் பலர் நடித்து வரும் படம் ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் இலங்கையில் நடைபெற்றது. படப்பிடிப்பு முடிந்த பின் நடிகர்கள் உள்ளிட்ட முக்கிய கலைஞர்கள் பலரும் சென்னை திரும்பி விட்டனர். ஆனால், தயாரிப்புப் பணிகளைக் கவனித்து வந்த டெக்னீஷியன்கள் இன்னமும் இலங்கையில் சிக்கித் தவிப்பதாக கூறப்படுகிறது.

இலங்கையில் படப்பிடிப்பு நடத்தியதற்கான செலவுத் தொகையை தயாரிப்பு நிறுவனம், அங்கு படப்பிடிப்பு நடத்த ஏற்பாடு செய்த நிறுவனத்திற்கு இன்னும் தரவில்லையாம். அதனால், அவர்களது பாஸ்போர்ட்களை அந்நிறுவனம் வாங்கி வைத்துள்ளதாகச் சொல்கிறார்கள். இதற்கிடையே டெக்னீஷியன்களை பத்திரமாக சென்னைக்கு அழைத்து வருவதற்காக படக்குழு தரப்பிலிருந்து சிலர் அங்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

Tags : Sivakarthikeyan ,Sri Lanka ,Chennai ,Sudha Kongara ,Ravi Mohan ,Atharvaa ,Srileela ,Dawn Pictures ,
× RELATED இரண்டாவது படத்திலேயே இயக்குனரான நடிகை