×

காஸ் வெல்டிங் செய்தபோது சிலிண்டர் வெடித்து 2 பேர் படுகாயம்

பெரம்பூர்: சென்னை சூரபேட்டை பிரகாஷ் நகரை சேர்ந்தவர் குகந்தாஸ் (39). இவர், கொளத்தூர் வேலவன் நகர் மெயின் ரோடு பகுதியில் தண்ணீர் கேன் போடும் வேலை செய்கிறார். மேலும் அந்த கடைக்கு நேர் எதிரே மரத்தின் கீழே வெல்டிங் மிஷின்கள் மற்றும் இரண்டு கூலி ஆட்களை வைத்து வெல்டிங் தொழிலும் செய்து வருகிறார். குகந்தாஸிடம் கொளத்தூர் அன்னை சத்யாநகரைச் சேர்ந்த சதீஷ்குமார் (25). வேலை செய்து வருகிறார். நேற்று மதியம் 2 மணி அளவில் சதீஷ்குமார், அவரது நண்பரான கொளத்தூர் ராமகிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்த வைணவ பெருமாள் (32) என்பவரும் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது காஸ் சிலிண்டர் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அங்கிருந்து பொருட்கள் அனைத்தும் சிதறி அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது. இதில், வைணவ பெருமாளுக்கு கை, கால், மார்பு பகுதிகளில் பலத்தகாயம் ஏற்பட்டது. மேலும் கால் எலும்புகள் உடைந்தன. சதீஷ்குமாருக்கும் எலும்புகள் உடைந்தன. அக்கம்பக்கதினர் இருவரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து கொளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆள்நடமாட்டம் குறைவாக இருந்தது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மரத்தடியில் ஆபத்தான முறையில் வெல்டிங் வேலை செய்ததால்விபத்து ஏற்பட்டது தெரியவந்தது….

The post காஸ் வெல்டிங் செய்தபோது சிலிண்டர் வெடித்து 2 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Perambur ,Gukandas ,Prakash Nagar, Surapet, Chennai ,Velavan Nagar Main Road ,Kolathur ,Dinakaran ,
× RELATED வெடித்து சிதறிய மின்பெட்டி