×

மாப்பிள்ளையூரணி, பூசனூரில் மாட்டு வண்டி போட்டி

தூத்துக்குடி : மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட இந்திராநகர் இந்திராசக்தி விநாயகர் கோயில் 32ம் ஆண்டு சதுர்த்தி விழாவையொட்டி டேவிஸ்புரம் மெயின் ரோட்டில் 30 ஜோடிகள் கலந்து கொண்ட பூஞ்சிட்டு மாட்டுவண்டி போட்டி நடந்தது. போட்டியை சண்முகையா எம்.எல்.ஏ, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான சரவணக்குமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். மாநகராட்சி குப்பை கிடங்கு வரை சென்று திரும்பிய 30 ஜோடி காளைகளில் வெற்றி பெற்ற புதூர் பாண்டியாபுரம் ஜோடி முதல்பரிசும், அரசடி ஜோடி இரண்டாம் பரிசும் பெற்றது. மேலும் 3 ஜோடிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் ரவி என்ற பொன்பாண்டி, மாவட்ட பிரதிநிதி தர்மலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, கிளைச்செயலாளர் பொன்னுச்சாமி, இந்திராநகர் பகுதி இளைஞர் அணி தலைவர் பழனிமுத்துமாடசாமி, ஊர் நிர்வாகிகள் தர்மராஜ், தங்கராஜ், ஆறுமுகச்சாமி, மற்றும் கௌதம், உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் குளத்தூர் அருகே உள்ள பூசனூர் கிராமத்தில் முனியசாமி கோயில் திருவிழாவையொட்டி கிராம பொதுமக்கள் சார்பில் மாட்டு வண்டி எல்கை போட்டி மற்றும் குதிரை வண்டி எல்கை போட்டி நடந்தது. விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் தலைமை வகித்தார். சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் சுமார் 25ஜோடி காளைகள் கலந்து கொண்டு எல்கையை நோக்கி சீறிப்பாய்ந்தன. முதல் இடம் பிடித்த சக்கம்மாள்புரம் ஜெயம்பரணி காளைகளுக்கு முதல்பரிசு ரூ15ஆயிரம் வழங்கினர்.இரண்டாவது இடம்பிடித்த குமரெட்டியாபுரம் கூஜன்ரோகித் காளைகளுக்கு ரூ.11ஆயிரமும், மூன்றவாது இடம்பிடித்த சுப்புலாபுரம் குருகார்த்திகேயன் காளைகளுக்கு ரூ.8ஆயிரம் வழங்கினர். தொடர்ந்து நடந்த பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் சுமார் 32 ஜோடி காளைகள் கலந்து கொண்டன. இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில் முதல் இடத்தை பிடித்த சிங்கிலிபட்டி முனிஸ்வரன், வேலாங்குளம் கண்ணன் ஆகியோர் காளைகளுக்கு முதல் பரிசு ரூ10ஆயிரம் வழங்கினர்.  இரண்டாவது இடம்பிடித்த கூட்டுப்பாறை சின்னஆண்டி மற்றும் தம்பிராட்டிஅம்மன் ஆகியோர் காளைகளுக்கு ரூ8ஆயிரம் வழங்கினர். மூன்றாவது இடம் பிடித்த துலுக்கன்குளம் சடையாண்டி மற்றும் ஊசிநமசிவாயபுரம் காசி ஆகியோரது காளைகளுக்கு ரூ6ஆயிரம் வழங்கினர். தொடர்ந்து நடந்த குதிரை வண்டி போட்டியில் 8குதிரை வண்டிகள் கலந்து கொண்டது. இதில் முதல் இடம் பிடித்த தச்சநல்லூர் குதிரை வண்டிக்கு ரூ10ஆயிரம் பரிசாக வழங்கினர். இரண்டாவது இடம் பிடித்த நெல்லை பேட்டையை சேர்ந்த குதிரைக்கு ரூ.8ஆயிரம் மற்றும் மூன்றாவது இடம் பிடித்த சீவலப்பேரி குதிரை வண்டிக்கு ரூ.6ஆயிரம் வழங்கினர். ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்….

The post மாப்பிள்ளையூரணி, பூசனூரில் மாட்டு வண்டி போட்டி appeared first on Dinakaran.

Tags : Bullock cart ,Mappillayurani, Bhusanur ,Thoothukudi ,Indiranagar ,Indrashakti Vinayagar Temple ,Mappillaiyurani ,32nd Chaturthi festival ,Davispuram ,
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...