×

அல்லேரிமலை கிராமத்தில் மாடு விடும் விழா: முதலிடம் பிடித்த காளைக்கு ரூ1.11 லட்சம் பரிசு

அணைக்கட்டு: அல்லேரிமலை கிராமத்தில் நடந்த மாடு விடும் விழாவில் முதலிடம் பிடித்த காளையின் உரிமையாளருக்கு ரூ.1.11 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவில் உள்ளது அல்லேரி மலை கிராமம். இந்த கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாடு விடும் விழா நேற்று நடந்தது. விழாவில் பங்கேற்க நேற்றுமுன்தினம் இரவே வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்பட வெளிமாவட்டங்களில் இருந்து வாகனங்களில் 250க்கும் மேற்பட்ட மாடுகள் அழைத்து வரப்பட்டன. நேற்று காலையில் மாடு விடும் விழா நடந்தது. ஏராளமான ரசிகர்கள் மலைக்கிராமத்தில் திரண்டனர். ஒவ்வொரு மாடும் ஒரு சுற்று மட்டுமே விடப்பட்டது. இதில் குறைந்த நேரத்தில் ஓடிய மாடுகளுககு பரிசு வழங்கப்பட்டது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த காளை முதலிடம் பிடித்தது. அந்த மாட்டிற்கு அதன் உரிமையாளரிடம் ரூ1.11 லட்சம் முதல் பரிசு வழங்கப்பட்டது. அதேபோல் இரண்டாம் பரிசாக ரூ88 ஆயிரம் உட்பட மொத்தம் 51 பரிசுகள் வழங்கப்பட்டன….

The post அல்லேரிமலை கிராமத்தில் மாடு விடும் விழா: முதலிடம் பிடித்த காளைக்கு ரூ1.11 லட்சம் பரிசு appeared first on Dinakaran.

Tags : Cow Growth Festival ,Allerimalaya Village ,Allerimalai village ,Allerimalle Village Cow Festival ,Bull ,
× RELATED அல்லேரிமலை கிராமத்தில் மாடு விடும்...