×

எம்பி மோகன் தெல்கர் தற்கொலை 9 பேர் மீதான எப்ஐஆர் ரத்து

மும்பை: தத்ரா நாகர் ஹவேலி தொகுதி எம்பி மோகன் தெல்கர் தற்கொலை வழக்கில், தத்ரா ஹவேலி தலைமை நிர்வாகி, கலெக்டர் உட்பட 9 பேர் மீது போலீசார் பதிவு செய்த வழக்கை (எப்ஐஆர் ) மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தத்ரா நாகர் ஹவேலி தொகுதி எம்பி.யாக இருந்தவர் மோகன் சஞ்சிபாய் தெல்கர் (58). சட்ட விரோதமாக மதுபானம் கடத்தியதாக இவருடைய ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த விசாரணைக்கு ஆஜராக, மோகன் தெல்கர் கடந்தாண்டு மும்பை வந்தார். ஓட்டலில் தங்கியிருந்த அவர் பிப்ரவரி 22ம் தேதி தற்கொலை செய்தார். தத்ரா ஹவேலியின் தலைமை நிர்வாகி, கலெக்டர் உள்ளிட்டோர் தனது தந்தைக்கு கொடுத்த தொல்லையின் காரணமாகவே, அவர் தற்கொலை முடிவுக்கு வந்ததாக, தெல்கரின் மகன் அபினவ் தெல்கர் குற்றம் சாட்டினார். இதன் அடிப்படையில், தத்ரா ஹவேலி தலைமை நிர்வாகி பிரபுல் கோடா பலேட் உட்பட 9 பேர் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் உட்பட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் கடந்தாண்டு மும்பை போலீசார், வழக்குப்பதிவு செய்தனர். இவர்கள் 9 பேரும், தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யும்படி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என கூறி, 9 பேர் மீதான வழக்கை ரத்து செய்வதாக நேற்று உத்தரவிட்டது….

The post எம்பி மோகன் தெல்கர் தற்கொலை 9 பேர் மீதான எப்ஐஆர் ரத்து appeared first on Dinakaran.

Tags : Mohan Telkar ,Mumbai ,Datra Nagar ,Haveli Block ,Datra Haveli ,Chief Executive ,
× RELATED மும்பை – சூரத் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு