×

அரையிறுதிக்கு முன்னேறினார் அல்கரஸ்

நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கரஸ் தகுதி பெற்றார். அல்கரஸ் – சின்னர் மோதிய காலிறுதி ஆட்டம் ஐந்தேகால் மணி நேரத்துக்கு நீடித்தது. காலிறுதியில் இத்தாலியின் யானிக் சின்னருடன் (21 வயது, 13வது ரேங்க்) மோதிய அல்கரஸ் (19 வயது, 4வது ரேங்க்) அதிரடியாக புள்ளிகளைக் குவித்து முதல் செட்டை 6-3 என எளிதாகக் கைப்பற்றி முன்னிலை பெற்றார். அடுத்த 2 செட்களிலும் யானிக் சின்னர் கடும் நெருக்கடி கொடுக்க, ஆட்டம் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்தது. 2வது மற்றும் 3வது செட்டை சின்னர் 7-6 (9-7), 7-6 (7-0) என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற ஆட்டத்தில் அனல் பறந்தது. அதன் பிறகு வியூகத்தை மாற்றி சின்னரின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த அல்கரஸ் 6-3, 6-7 (7-9), 6-7 (0-7), 7-5, 6-3 என 5 செட்களில் போராடி வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். புதன் கிழமை இரவு தொடங்கிய இந்த போட்டி வியாழன் அதிகாலை 3.00 வரை நீடித்தது (5 மணி, 15 நிமிடம்), யுஎஸ் ஓபன் வரலாற்றில் 2வது நீண்ட ஆட்டமாக அமைந்ததுடன், மறுநாளில் அதிக நேரத்துக்கு நீடித்த வகையில் புதிய சாதனையாகவும் அமைந்தது. முன்னதாக, அதிகாலை 2.26 வரை மட்டுமே ஒரு போட்டி நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியின்போது கடைசி வரை காத்திருந்து ஊக்குவித்த ரசிகர்களுக்கு அல்கரஸ் நன்றி தெரிவித்தார். மற்றொரு காலிறுதியில் ரஷ்யாவின் ஆந்த்ரே ருப்லேவுடன் மோதிய அமெரிக்க வீரர் பிரான்செஸ் டியபோ 7-6 (7-3), 7-6 (7-0), 6-4 என்ற நேர் செட்களில் வென்று முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்றார். அரையிறுதியில் அல்கரஸ் – டியபோ மோத உள்ளனர். இகா முன்னேற்றம்: மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் களமிறங்கிய நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-3, 7-6 (7-4) என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 53 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு காலிறுதியில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா சவாலை எதிர்கொண்ட அரினா சபலெங்கா (பெலாரஸ்) 6-1, 7-6 (7-4) என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். அரையிறுதியில் ஸ்வியாடெக் – சபலெங்கா பலப்பரீட்சையில் இறங்குகின்றனர்….

The post அரையிறுதிக்கு முன்னேறினார் அல்கரஸ் appeared first on Dinakaran.

Tags : Algaras ,New York ,Spain ,Carlos ,Algarez ,Dinakaran ,
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்