×

ரகசிய திருமணம் செய்த வளர்ப்பு மகளுக்கு ராஜ்கிரண் எச்சரிக்கை

சென்னை: விருமாண்டி படத்தில் நடித்தவர் சண்முகராஜன். பல படங்களில் வில்லன் வேடங்களில் நடித்திருக்கிறார். இவரது தம்பி முனிஷ்ராஜா. இவரும் நடிகர். ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதலுக்கு முனிஷ்ராஜாவின் குடும்பத்தார் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் ராஜ்கிரண் மற்றும் குடும்பத்தார் சம்மதிக்கவில்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் முனிஷ்ராஜாவும் பிரியாவும் சென்னையிலுள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்துகொண்டனர். இது குறித்து ராஜ்கிரண் கூறும்போது, ‘பிரியா எனது சொந்த மகள் அல்ல. அவர் வளர்ப்பு மகள்தான். பணத்தாசை பிடித்த ஒருவரை பிரியா மணந்துள்ளார். எனது மனைவி அந்த பையன் வேண்டாம் என சொல்லியும் கேட்கவில்லை. உறவினரை பார்க்கப்போவதாக சொல்லிவிட்டு திருமணம் செய்து வந்திருக்கிறார். இனி அவர்கள் இருவரில் யாராவது என் பெயரை பயன்படுத்தினால் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்….

The post ரகசிய திருமணம் செய்த வளர்ப்பு மகளுக்கு ராஜ்கிரண் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Rajkiran ,Chennai ,Sanmukharajan ,Munishraja ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...