×

கனமழை காரணமாக சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடியது

மூணாறு : கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மூணாறு உட்பட சுற்றுலா நிலையங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன.ஓணம் பண்டிகை விடுமுறையொட்டி 10 நாட்களுக்கு முன்பே, மூணாறு, வட்டவடை, பள்ளிவாசல் மற்றும் ஆணச்சால் போன்ற இடங்களில் உள்ள பெரும்பாலான தங்கும் விடுதிகளில் அறைகள் அனைத்தும் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டன. இருப்பினும், ஒரு வாரமாக மூணாறு மற்றும் சுற்றுப்புற பகுதியில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு அச்சுறுத்தல் காரணமாக, பெரும்பாலான சுற்றுலா பயணிகள் கடந்த சில நாட்களுக்கு முன் முன்பதிவு செய்ததை ரத்து செய்தனர்.தமிழகம், கர்நாடகா,ஆந்திரா போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்களும் மற்றும் கேரளத்தை சேர்த்த சுற்றுலா பயணிகளும் தான் தங்கும் விடுதிகளில் அறைகளை முன்பதிவு செய்திருந்தது.இந்நிலையில் முந்தைய முன்பதிவுகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டதால், சுற்றுலாவை மட்டுமே நம்பியுள்ள தங்கும் விடுதி உரிமையாளர்கள் உட்பட பல்வேறு துறைகளில் பணிபுரிபவர்களுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது….

The post கனமழை காரணமாக சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடியது appeared first on Dinakaran.

Tags : Moonaru ,Moonadu ,Ikkki district ,Kerala ,Oenam ,Dinakaran ,
× RELATED குடும்பமாக வரும் யானைகளின் ‘பிரைவஸி’...