×

சித்தூர் கைலாசபுரம் பகுதியில் ₹29.20 கோடியில் நீர்நிலை தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டு விழா-எம்எல்ஏ தொங்கி வைத்தார்

சித்தூர் : சித்தூர் கைலாசபுரம் பகுதியில் ₹29.20 கோடியில் நீர்நிலை தேக்க தொட்டி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதனை எம்எல்ஏ ஜங்காளப்பள்ளி சீனிவாசலு தொடங்கி வைத்தார். சித்தூர் கைலாசபுரம் பகுதியில் ₹29.20 கோடியில் நீர் நிலை தேக்க தொட்டி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. எம்எல்ஏ ஜங்காளப்பள்ளி   சீனிவாசலு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது: சித்தூர் மாநகரத்திற்கு எப்போதுமே குடிநீர் பிரச்னை பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு முதல்வர் ஜெகன்மோகன் அடிவிப்பள்ளி அணையில் இருந்து பைப்லைன் மூலம் சித்தூர் மாநகரத்திற்கு குடிநீர் வழங்க உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, 65 கி.மீட்டர் தொலைவில் இருக்கும் அடிவிப்பள்ளி அணையில் இருந்து பைப்லைன் மூலம் சித்தூர் மாநகரத்திற்கு குடிநீர் எடுத்து வர பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக ₹250 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது சித்தூர் மாநகரத்தில் 2 பகுதிகளில் தண்ணீர் டேங் தொட்டிகள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. கொங்காரெட்டியில் 2 தண்ணீர் டேங் தொட்டி கட்டப்பட உள்ளது. 6,500 குடும்பங்களுக்கு 24 மணிநேரமும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் 24 மணிநேரமும் குடிநீர் விநியோகம் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது. புதிதாக கட்டப்பட உள்ள நீர்நிலை டேங் தொட்டி மார்ச், ஏப்ரல் மாதத்திற்குள் முடிவடைந்து விடும். இவ்வாறு, அவர் பேசினார். இதில், ராயலசீமா குடிநீர் திட்ட அதிகாரி கோபால், இணை அதிகாரி விஜயசிம்மா, மாநகராட்சி மேயர் அமுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்….

The post சித்தூர் கைலாசபுரம் பகுதியில் ₹29.20 கோடியில் நீர்நிலை தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டு விழா-எம்எல்ஏ தொங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chittoor Kailasapuram ,Chittoor ,MLA ,Dinakaran ,
× RELATED சித்தூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்