×

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிபோட்டிக்கு ஸ்வியாடெக், ஜபீர் தகுதி

நியூயார்க்: கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி போட்டிகள் இன்று நடந்தது. முதல் அரையிறுதியில் 5ம் நிலை வீராங்கனையான துனிசியாவின் 28 வயது ஓன்ஸ்ஜபீர், 17ம் நிலை வீராங்கனை பிரான்சின் 28 வயது கரோலின் கார்சியா மோதினர். இதில் ஜபீர் 6-1, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதன்முறையாக யுஎஸ் ஓபனில் பைனலுக்குள் நுழைந்தார். மற்றொரு அரையிறுதியில் நம்பர் 1 வீராங்கனையான போலந்தின் 21 வயதான இகாஸ்வியாடெக், 6ம் நிலை வீராங்கனையான பெலாரசின் 24 வயது அரினா சபலென்கா பலப்பரீட்சை நடத்தினர். இதில் முதல் செட்டை 6-3 என சபலென்கா கைப்பற்றினார். 2வது செட்டில் அதிரடி காட்டிய ஸ்வியாடெக், 6-1 எளிதாக கைப்பற்றி பதிலடி கொடுத்தார். 3வது செட்டில்  கடும் போட்டி ஏற்பட்ட நிலையில், 6-4 என ஸ்வியாடெக் கைப்பற்றி பைனலுக்குள் நுழைந்தார். நாளை மறுநாள் நடைபெறும் பைனலில் ஜபீர்- இகா ஸ்வியாடெக் மோதுகின்றனர்….

The post அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிபோட்டிக்கு ஸ்வியாடெக், ஜபீர் தகுதி appeared first on Dinakaran.

Tags : US Open Tennis ,Sviatek ,Zabir ,New York ,Grand Slam ,Jabeer ,Dinakaran ,
× RELATED பாரிபா ஓபன் டென்னிஸ் ஸ்வியாடெக் அசத்தல்