×

அரசு பஸ் மீது கார் மோதி 3 பேர் பரிதாப பலி

திண்டுக்கல்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் அபிஜித். இவர் தனது குடும்பத்தினர் 8 பேருடன் காரில் பழநி கோயிலுக்கு வந்து கொண்டிருந்தார். காரை திருவனந்தபுரம் அருகே கரமணையை சேர்ந்த டிரைவர் கண்ணன் ஓட்டி வந்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா செம்பட்டி-ஒட்டன்சத்திரம் சாலையில் இ.பண்ணைப்பட்டி பிரிவு அருகே அவர்கள் வந்த காரின் டயர் திடீரென வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடிய கார், சென்டர் மீடியன் சுவரை உடைத்துக் கொண்டு, எதிர்புறம் பழநியில் இருந்து மதுரைக்கு வந்து கொண்டிருந்த அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். காரில் இருந்த மேலும் 7 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்களை போலீசார் மீட்டு, ஒட்டன்சத்திரம் மற்றும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதில் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட 2 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதையடுத்து பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்தது. இந்த விபத்து குறித்து கன்னிவாடி போலீசார் வழக்குப்பதிந்து, பலியானவர்களின் பெயர், விபரம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தால் இன்று காலை செம்பட்டி-ஒட்டன்சத்திரம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது….

The post அரசு பஸ் மீது கார் மோதி 3 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Abhijith ,Thiruvananthapuram, Kerala ,Palani temple ,
× RELATED மே 30-ல் பழனி கோயில் ரோப் கார் சேவை நிறுத்தம்