×

கொள்ளிடம் ஆற்றில் 4-வது முறையாக வெள்ளப்பெருக்கு: சீர்காழி அருகே ஆற்றுப்படுகை கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தன

சீர்காழி: சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றில் 4-வது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து ஆற்றுப்படுகை கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் வீடுகளில் விட்டு வெளியேறிய மக்கள் கால்நடைகளுடன் கரையில் தஞ்சமடைந்துள்ளனர். காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 1.25 லட்சம் கன அடி தண்ணீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. இதனால் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றில் இரு கரைகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆற்றுப்படுகை கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. நாதல்படுகை, முதலைமேடுத்திட்டு, வெள்ளமணல் உள்ள கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்துள்ளது. அடுத்தடுத்த வெள்ளப்பாதிப்புகளால் செய்வதறியாது மக்கள் நிரந்தர அடுக்குமாடி குடியிறுப்பு கட்ட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர். இதைப்போல சேலம் மாவட்டம் எடப்பாடி சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் க.புதூர் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு எடப்பாடி நகராட்சி தொடக்கபள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். …

The post கொள்ளிடம் ஆற்றில் 4-வது முறையாக வெள்ளப்பெருக்கு: சீர்காழி அருகே ஆற்றுப்படுகை கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தன appeared first on Dinakaran.

Tags : Sirksha ,Seiragus ,Dinakaran ,
× RELATED அழகான குழந்தைப் பேறுக்கு அமைய வேண்டிய பொருத்தம்