×

கும்மிடிப்பூண்டி பகுதியில் விநாயகர் ஊர்வலம்; ஆலோசனை கூட்டம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் விநாயகர் ஊர்வலத்தை அமைதியாக நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கும்மிடிப்பூண்டி, சிப்காட், கவரப்பேட்டை, ஆரம்பாக்கம், பாதிரிவேடு ஆகிய காவல் நிலையத்திற்கு உட்பட்ட ரெட்டம்பேடு, ஆத்துப்பாக்கம், வழுதலம்பேடு, குருவிஅகரம், மங்காவரம், கும்மிடிப்பூண்டி பஜார், தண்டலச்சேரி, மாதர்பாக்கம், மாநெல்லூர், தோக்கமூர், நாயுடுகுப்பம், பூவலம்பேடு, கண்ணம்பாக்கம், கண்ணன்கோட்டை, பெரியபுலியூர், புதுவாயல், பெருவாயல், கீழ் முதலம்பேடு, சுண்ணாம்புகுளம், ஓபசமுத்திரம், தேவம்பட்டு, சேகன்னியம், உம்மிபேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 50க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. இந்நிலையில், நாளை விநாயகர் சிலைகள் மேளத்தாளங்களுடன் ஊர்வலமாக எளாவூர் ஏழுகிணறு பகுதியில் சிலை கரைப்படுகிறது. இந்த ஊர்வலத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தீயணைப்பு வாகனம் மற்றும்  போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து நேற்று கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் டிஎஸ்பி கிரியோசத்தி தலைமையில் கும்மிடிப்பூண்டி நடைபாதை வியாபாரிகள் இடையே விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டிஎஸ்பி கிரியோ சத்தி, ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் வரும் நாளை (4ம் தேதி)  விநாயகர் ஊர்வலம் வர இருப்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும். நடைபாதை வியாபாரிகள் ஞாயிற்றுக்கிழமையன்று விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு போக்குவரத்து நெரிசல் காரணமாக நடைபாதை வியாபாரிகள் தாங்கள் விடுமுறை எடுத்து கொள்வதாக உறுதியளித்தனர்….

The post கும்மிடிப்பூண்டி பகுதியில் விநாயகர் ஊர்வலம்; ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Ganesha ,Kummidipoondi ,Ganesha Chaturthi ,Sipkot ,Dinakaran ,
× RELATED ஓய்வு பெற்ற அஞ்சல்துறை ஊழியரின்...