×

மின்சாரம், ஹைட்ரஜன் வாகனங்களை அதிகரிக்க ஐஐடி புதிய ஒப்பந்தம்

சென்னை: போக்குவரத்தில் மின்சாரம், ஹைட்ரஜன் வாகனங்களை அதிகரிக்க செய்யும் வகையில், டெய்ம்லர் நிறுவனம் மற்றும் சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. சென்னை  ஐஐடியில் போக்குவரத்து துறையில் முன்னெடுக்கப்படும்  தொழிநுட்பங்களுக்கு புதிய தீர்வுகளை உருவாக்கும் வகையில், சென்னை ஐஐடி மற்றும்  டெய்ம்லர் இந்தியா கமர்சியல் நிறுவனம் இணைந்து புரிந்துணர்வு  ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டன. இந்த நிகழ்ச்சியில், சிஐஐ தமிழ்நாடு  சேர்மன் மற்றும்  டெய்ம்லர் இந்திய  வணிக வாகன நிறுவனத்தின் இயக்குனர் சத்யகாம் ஆர்யா, ஐஐடி பேராசிரியர்கள்  கலந்து கொண்டனர். சென்னை ஐஐடி மற்றும்  டெய்ம்லர் இந்தியா கமர்சியல் நிறுவனம் ஒப்பந்தம் மூலம், எதிர்கால  போக்குவரத்தில் புதிய தீர்வுகள் கண்டறியப்படும். மேலும், புதிய தொழில்நுட்ப நிறுவனங்கள் கண்டறியப்பட்டு தொழில் வளர்ச்சி உதவப்படும் மற்றும் எதிர்காலத்தில் மின்சாரம் மற்றும்  ஹைட்ரஜன் வாகன பயன்பாடுகள்  அதிகரிக்க வழிவகை செய்யப்படும். இந்த  புரிந்துணர்வு ஒப்பந்தம்  மூலம்  போக்குவரத்து துறையில் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட உள்ளது என  தெரிவித்தனர்….

The post மின்சாரம், ஹைட்ரஜன் வாகனங்களை அதிகரிக்க ஐஐடி புதிய ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Daimler ,IIT Chennai ,Dinakaran ,
× RELATED அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனத்தின் அக்னிபான் ராக்கெட் சோதனை வெற்றி