×

ஆர்.கே.பேட்டை அருகே மூதாட்டி உடலை அடக்கம் செய்ய போராட்டம்

பள்ளிப்பட்டு:  ஆர்.கே.பேட்டை ஒன்றியம் ஜி.சி.எஸ்.கண்டிகை ஊராட்சி மேட்டு காலனியில், ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த 5 குடும்பத்தினர் வசிக்கின்றனர். அந்த கிராமத்தில் இறந்தவர்களை அங்குள்ள விவசாய நிலங்களுக்கு பக்கத்தில் வண்டிப்பாதை புறம்போக்கு இடத்தில் நல்லடக்கம் செய்து வந்தனர். இந்நிலையில், அக்கிராமத்தை சேர்ந்த நாகம்மாள் என்ற மூதாட்டி நேற்று முன்தினம் இரவு இறந்தார். அவரது  உடலை வழக்கம் போல் சுடுகாட்டில் நல்லடக்கம் செய்ய உறவினர்கள் நேற்று காலை சுமார் 10 மணியளவில் உடலை எடுத்துக் கொண்டு வண்டி பாதை புறம்போக்கு நிலத்திற்கு வந்தனர். ஆனால் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சுடுகாடாக  பயன்படுத்தப்படும் இடத்திற்கு அருகில் வீடு கட்டி வரும்  விவசாய நிலத்தின் உரிமையாளர் மோகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் இடைக்கால தடைபெற்றுள்ளார். இதனால், அங்கு சடலத்தை புதைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இவர்களுக்கு, ஆதரவாக புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் கிராம மக்கள் 50க்கும் மேற்ப்பட்டோர்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, காவல் ஆய்வாளர் ராஜ் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சடலத்தை வேறு இடத்தில் நல்லடக்கம் செய்ய  மறுத்தனர். அதேநேரத்தில் விவசாய நிலத்தின் உரிமையாளர் நீதிமன்ற இடைக்கால தடை உத்தரவை காரணம் காட்டி ஈவு இரக்கமில்லாமல் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசாருக்கு கடும் நெறுக்கடி கொடுத்தார். இதனையடுத்து, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அஸ்ரத்பேகம்,  துணை காவல் கண்காணிப்பாளர் விக்னேஷ், வட்டாட்சியர் சரவணன் ஆகியோர் நேற்று  காலை முதல் மாலை  6 மணி வரை தொடர்ந்து பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.  இறுதியில்,  சுடுகாடாக பயன்ப்படுத்தி வரும் பகுதிக்கு அருகில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் மூதாட்டியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. …

The post ஆர்.கே.பேட்டை அருகே மூதாட்டி உடலை அடக்கம் செய்ய போராட்டம் appeared first on Dinakaran.

Tags : RK Pettah ,PALLIPATTA ,Mettu Colony ,GCS Kandigai Panchayat ,RK Pettah Union ,
× RELATED சசிகலா அணியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த கவுன்சிலர்கள்