×

வேலூர் டிகேஎம் மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி நிறைவு விழா-27 மாணவிகளுக்கு சான்று வழங்கி பாராட்டு

வேலூர் : வேலூர் டிகேஎம் மகளிர் கல்லூரி மற்றும் எக்ஸ்சன் நிறுவனம் சார்பில் மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி நிறைவு விழா நேற்று நடந்தது. இதில் 27 மாணவிகளுக்கு சான்று வழங்கி பாராட்டினர். வேலூர் டிகேஎம் மகளிர் கல்லூரி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமான எக்ஸ்சன் சார்பில் கடந்த ஜூலை 21ம் தேதி மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு பரிவர்த்தனம் என்று பெயரிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் பயிற்சி நிறைவு விழா மற்றும் பாராட்டு விழா வேலூர் டிகேஎம் மகளிர் கல்லூரியில் நேற்று நடந்தது. கல்லூரி தலைவர் டி.சிவக்குமார், கல்லூரியின் செயலர் டி.மணிநாதன் வழிகாட்டுதல்படி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதில் தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை மண்டல இணை இயக்குனர் அமலாரெக்சிலைன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் எக்ஸ்சன் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை அதிகாரியாக எல்.எஸ்.ராம் பேசுகையில், ‘இன்றைய காலகட்டத்தில் தொடர்ந்து கற்றல் மற்றும் தன்னைத் தானே மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை மிக அவசியம். இந்தியாவின் முன்னேற்றத்திற்கு கல்வியே அடித்தளம். இந்த 5 வார கால ‘காம்பஸ்டுகார்ப்பரேட் மாற்றம் மற்றும் அடிப்படை பயிற்சி முடிவடையவில்லை. ஏனென்றால் இளம் பட்டதாரிகளுக்கு இப்போது உலகை எதிர்கொள்ளவும், சுகாதாரத் துறையில் தங்கள் நிலையை உறுதிப்படுத்தவும் நம்பிக்கையுடன் இருக்கும் ஆரம்பம் மட்டுமே என்று நாங்கள் நம்புகிறோம், என்றார். தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் ஆர்.பானுமதி பயிற்சியில் பங்கேற்ற 27 மாணவிகளுக்கு பங்கேற்புச்சான்றிதழ்களை வழங்கிப்பாராட்டினார். வாரந்தோறும் வெற்றிபெற்றவர்களுக்கு முதல் 3 இடம் பிடித்த மாணவிகளுக்கு எல்.எஸ்.ராம் மற்றும் சிறப்பு விருந்தினர் அமலாரெக்சிலைன் கொடை ரசீது மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினார். 5 வாரங்களில் நடைபெற்ற பயிற்சியில் சிறந்த செயல்பாட்டிற்கான முதல் பரிசு மாணவி எஸ்.ஷில்பாவுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் எக்ஸ்சன் நிறுவனத்தின் ஐடி நிர்வாக அலுவலர் பிரதீப், கல்லூரி பேராசிரியைகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்….

The post வேலூர் டிகேஎம் மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி நிறைவு விழா-27 மாணவிகளுக்கு சான்று வழங்கி பாராட்டு appeared first on Dinakaran.

Tags : TKM Women's College ,Vellore ,DKM Women's College ,Exson ,Dinakaran ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...