×

அமெரிக்காவிலும் மதவெறி ரொம்ப கேவலமா இருக்க… சக இந்தியர் மீது எச்சில் துப்பிய சீக்கியர்

நியூயார்க்: அமெரிக்காவில் இந்தியரே, மற்றொரு இந்தியரை அவமானப்படுத்திய சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் மீது அந்நாட்டு மக்கள் இனவெறி தாக்குதல் நடத்துவதும், அவமானப்படுத்துவதும் அடிக்கடி நடக்கின்றன. சமீபத்தில் கூட, 4 இந்திய பெண்களை ஒரு அமெரிக்கப் பெண் இழிவுப்படுத்தி தாக்கியதால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கலிபோர்னியா மாகாணத்தில் வசிக்கும் கிருஷ்ணன் ஜெயராமன், சக இந்தியரான சீக்கியர் ஒருவரால் மதவெறி தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்.இது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 8 நிமிடங்கள் பதிவான அந்த வீடியோவில், தேஜிந்தர் சிங் என்ற 37 வயது சீக்கியர், கிருஷ்ணன் ஜெயராமனை பார்த்து,  ‘நீ அசுத்தமான இந்து… பார்க்கவே கேவலமாக இருக்கிறாய்… இனி, இதுபோல் வெளியே வராதே…’ என்று திட்டிக் கொண்டே, அவர் மீது 2 முறை எச்சில் உமிழ்கிறார். இந்த சம்பவத்தால் மிகவும் பயந்து விட்டதாகவும், தன் மீது சக இந்தியர் ஒருவரே மதவெறி தாக்குதல் நடத்தியது மிகவும் வேதனை அளிப்பதாக கிருஷ்ணன் ஜெயராமன் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்….

The post அமெரிக்காவிலும் மதவெறி ரொம்ப கேவலமா இருக்க… சக இந்தியர் மீது எச்சில் துப்பிய சீக்கியர் appeared first on Dinakaran.

Tags : America ,Sikhs ,Indians ,New York ,
× RELATED சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங்...