×

புல்லட்சாமிக்கு எதிராக ஆபரேஷனை கையில் எடுத்துள்ள தாமரையை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘வளைத்து பிடிப்பது ரொம்ப ஈசியாக இருந்துச்சு. அதை தக்க வைக்க போராட வேண்டி இருப்பதாக யாரு புலம்பறாங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘பூட்டு மாவட்டத்தில் இலைக்கட்சியில் ஊரை தன் பெயரின் முன்புறம் சேர்த்துக் கொண்ட இரு முன்னாள் அமைச்சர்கள் சேலத்துக்காரர் பக்கம் இருக்காங்க. ஆனால், இவரது ஆதரவாளர்களில் சிலர் தேனிக்காரருக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்றாங்க. மேலும், தேனிக்காரருக்கு ஆதரவான தீர்ப்பு கோர்ட்டில் வந்ததால், மாவட்டத்தின் ‘சந்தூர்’, ‘சத்திரம்’ ஒன்றியங்களின் நிர்வாகிகள், தேனிக்காரருக்கு ஆதரவு தெரிவித்ததுடன், தனது ஆதரவாளர்களுடன் கார்களில்  அவரது வீட்டிற்கே சென்று வந்துள்ளனர். இவர்களை வைத்து மாவட்டத்தின் கிழக்கு, மேற்கு பகுதிகளில் முக்கிய நிர்வாகிகளை, வளைத்து போடும் முயற்சியில் தேனிக்காரர் தரப்பு  தீவிரம் காட்டி வருகிறது. இதனையறிந்த  இலைக்கட்சியின் இரு முன்னாள் அமைச்சர்களும் ‘நாங்களும் ஏதாவது செய்வோம்… போயிடாதீங்க’ என்று, தேனி தரப்பு யாரிடமெல்லாம் வலை விரித்துள்ளதோ, அவர்களுக்கெல்லாம் பதிலுக்கு போன் போட்டு பேசி வர்றாங்க. ‘ரெண்டு தரப்பும், சேலம் பக்கம் இழுத்து பெரிய சாதனை இல்லை. இவங்களை கண்காணிக்கிறதும், அவங்களை மீண்டும் வேறு பக்கம் தாவ விடாம பார்த்துகிறதும் பெரிய சவலாக இருக்கு என்று கட்சித் தொண்டர்கள் காதுபட பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.‘‘டைம்பாம் போல சைலண்டாக இருக்கும் மாஜி அமைச்சரை சந்தேக லிஸ்டில் சேர்த்திருக்கும் சேலம் தரப்பை பற்றிச் சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலைகட்சியில் சேலத்துக்காரர் மற்றும் தேனிக்காரர் தனித்தனியாக பிரிந்த பிறகு, இருதரப்பை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுறாங்க. இரண்டு அணியில் இருந்து வரும் மாஜி அமைச்சர்களும் போட்டி போட்டு வசைபாடி வர்றாங்க. ஆனால், கடலோர மாவட்டத்தில் உள்ள மாஜி அமைச்சரும், தற்போது சேலத்துக்காரர் அணியில் இருந்து வரும் மணியானவர் மட்டும் தேனிக்காரர் குறித்து எந்தவித குற்றச்சாட்டுகளை தெரிவிக்காமல் சைலண்டாக இருக்காராம். இது சேலத்துக்காரர் அணியினர் இடையே இவர் சிலீப்பர் செல்லா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாம். தேனிக்காரர் குறித்து, பெரிய அளவில் மாஜி அமைச்சர் மணியானவர் பேசாமல் இருப்பது ஏன் என சேலத்துக்காரர் அணியினரிடம் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதனால் மாஜி அமைச்சர் மணியானவரை சேலத்துக்காரர் டீம் அவருக்கு தெரியாமலேயே ரகசியமாக கண்காணித்து வருகிறதாம். இவர் மட்டும்தான் ஆரம்பத்தில் இருந்தே மவுனம் காத்து வருகிறாராம்… ஓபனாக யாருக்கு ஆதரவு என்பதை மிஸ்டர் பெல் சொல்ல வேண்டும் என்பதுதான் இப்போது சேலம் தரப்பினரின் கேள்வியாக இருந்து வருதாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘ஆசிரியர்களின் மனுக்களை அதிகாரிகளிடம் காட்டாமல் டபுள் கேம் ஆடும் அதிகாரியை பற்றிச் சொல்லுங்க, கேட்போம்…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘வெயிலூர் மாவட்டத்தில சிஇஓவாக சாமி என முடியும் பெயர் கொண்டவர் பணியாற்றி வருகிறார். இவரது பிஏவாக ஜெயமானவர் உள்ளார். கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்துக்கு சாமி வராமல், காட்பாடியில் உள்ள எஸ்எஸ்ஏ திட்ட அலுவலகத்தில் இருக்கிறாராம். இந்நிலையில, மாவட்டத்துல பணியாற்றும் ஆசிரியர்கள் பலரும் தங்களது கோரிக்கை மனுவை எடுத்து வர்றாங்க. அப்போது, சிஇஓ இல்லாததால், அவருக்கு அடுத்த நிலையில ஜெயமானவர், ஆசிரியர்களிடம் இருந்து வாங்கும் மனுக்களை பதிவு செய்யாமல் வாங்கி, கிடப்பில் போட்டு விடுகிறாராம். தனக்கு வேண்டிய ஆசிரியர்கள் கோரிக்கைகளை மனுக்களை உயர் அதிகாரிக்கு தெரிவிப்பதும், இல்லையென்றால் ஆசிரியர்களின் மனுக்கள் எல்லாம் எங்கு போகிறது என்றே தெரியவில்லையாம்… கரன்சி எதிர்பார்க்கிறாரா இல்லை பட்டு எதிர்பார்கிறாரா என்பது தெரியாமல் ஆசிரியர்கள் தவித்து வர்றாங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘சுயேச்சைகளை வைத்து ஆபரேஷன் தாமரையை எந்த மாநிலத்தில் துவக்கி இருக்காங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘நடந்து முடிந்த புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தில், பாஜ எம்எல்ஏக்கள், தாமரை ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்கள் புல்லட்சாமியையும், ஆட்சியையும் கடுமையாக விமர்சித்து பேசினார்களாம். ‘எங்கள் தொகுதியில் வளர்ச்சி திட்டங்களை   மறைமுக தடுக்கும் புல்லட்சாமி ஒன்றை ஞபாகம் வைத்துக்கொள்ள வேண்டும். எங்கள் ஆதரவில்தான் இங்கே முதல்வராக அமர்ந்திருகிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டுமென தாமரை பொறித்த துண்டை காட்டி பேசினார்களாம். ஒரு கட்டத்தில்  தாமரை எம்எல்ஏ வெளிநடப்பு செய்வேன் என ஆவேசம் காட்டினார். அப்போது எழுந்த எதிர்கட்சி எம்எல்ஏக்கள் எங்கள் வேலைகளையெல்லாம் குறைத்துவிட்டீர்கள். இந்த ஆட்சியின் முறைகேடுகள், குறைகளையெல்லாம்  கூட்டணியில் இருந்து கொண்டே சுட்டிக்காட்டுவதற்கு வாழ்த்துகள். இந்த சண்டைக்கோழிகள் இருக்கும் வரை, எங்களுக்கு எந்த குறையும் இல்லையென கூறி கலகலத்தனர். இதனால் கூட்டணியில் விரிசல் என எதிர்கட்சிகள் கொளுத்தி போட, உள்துறை அமைச்சர் சிவமானவரு, எங்கள் எம்எல்ஏக்கள் மக்கள் பிரச்னைகளை ஆரோக்கியமாக விவாதிக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளுங்கள். விரிசல் என்று எதுமில்லை. ஐந்தாண்டுகள் பேஸ்ட் போட்டு வைத்திருக்கிறோம் என விளக்கம் கொடுத்தாராம்’’ என்றார் விக்கியானந்தா….

The post புல்லட்சாமிக்கு எதிராக ஆபரேஷனை கையில் எடுத்துள்ள தாமரையை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Tamarai ,
× RELATED திருவண்ணாமலை மகிளா கோர்ட் பரபரப்பு...