×

கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலி

ஆவடி: கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்தார். ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் கிழக்கு மாட வீதியை சேர்ந்தவர் சுகுணா (83) இவர் தனது பேரன் ஜெகதீசன் (30) குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்றுமுன்தினம் நள்ளிரவு வீட்டின் பின்புறம் 2 அடி உயரமுள்ள கிணற்றில் கழிவறைக்கு செல்வதற்காக தண்ணீர் எடுக்க முயன்ற  சுகுணா கிணற்றில் தவறி விழுந்து இறந்தார். தகவல் அறிந்து வந்த  அம்பத்தூர் தீயணைப்பு துறையினர் அவரது உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்படி, திருமுல்லைவாயில்  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

The post கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலி appeared first on Dinakaran.

Tags : Awadi ,Thirumullaivaya East ,street ,Suguna ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...