×

மேல்மருவத்தூர் அருகே ரயில் மீது மோதிய மயில் உயிரிழப்பு

மதுராந்தகம்:  திருப்பதியில் இருந்து பாண்டிச்சேரிக்கு சுமார் 1,500 பயணிகளுடன் நேற்று பாசஞ்சர் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் மதுராந்தகம் மேல்மருவத்தூர் இடையே பாக்கம் எனும் பகுதிக்கு வந்து கொண்டு இருந்தது. அப்போது, வயல்வெளி பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த மயில் ஒன்று பறந்து வந்து, ரயில் எஞ்சின் முன்பக்க கண்ணாடி மீது மோதியது. ரயில் வேகமாக சென்றதால், மயில் பலத்த காயமடைந்து அங்கேயே பரிதாபமாக  துடிதுடித்து இறந்தது. இதில், ரயில் என்ஜின் கண்ணாடி  உடைந்து நொறுங்கியது. இதனால், இந்த ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே துறையினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு, அச்சிறுப்பாக்கத்தில் இருந்து வந்த வனத்துறையினர் ரயிலில் மோதி இறந்த மயிலின் உடலை எடுத்து சென்றனர். இதனால், அந்த ரயில் நிறுத்தப்பட்டு சுமார் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இது குறித்து செங்கல்பட்டு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post மேல்மருவத்தூர் அருகே ரயில் மீது மோதிய மயில் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Malmaruvathur ,Madurandakam ,Tirupathi ,Pondicherry ,Mathurandakam ,Melmaruvathur ,Dinakaran ,
× RELATED திருமலையில் பக்தர்கள் அதிகரிப்பு...