×

தொடர்ந்து பறிபோகும் உயிர்கள்!: சங்கரன்கோவில் அருகே நீட் தேர்வு தோல்வி பயத்தால் விவசாயி மகள் தூக்கிட்டு தற்கொலை..!!

தென்காசி: சங்கரன்கோவில் அருகே நீட் தேர்வு பயத்தில் விவசாயி-யின் மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது குலசேகரமங்கலம். இந்த பகுதியை சேர்ந்த விவசாயியான அமல்ராஜ் – வெண்ணிலா தம்பதியின் மூத்த மகளான 21 வயதாகும் ராஜலட்சுமி, கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதி அதில் தோல்வியடைந்தார். தற்போது 3வது முறையாக அவர் நீட் தேர்வினை எழுதியுள்ளார். இதன் முடிவுகள் வரும் 7ம் தேதி வெளியிடப்படவுள்ளன. இந்த தேர்வு வினாத்தாளின் விடைகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதனை பார்த்ததில் இருந்து ராஜலட்சுமி சோகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து அறிந்த சேந்தமங்கலம் போலீசார் ராஜலட்சுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நீட் தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளதால் தோல்வியடைந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. …

The post தொடர்ந்து பறிபோகும் உயிர்கள்!: சங்கரன்கோவில் அருகே நீட் தேர்வு தோல்வி பயத்தால் விவசாயி மகள் தூக்கிட்டு தற்கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Sankaranko ,Tenkasi ,Tenkasi District ,Sankarango ,
× RELATED மகள்களுக்கு பாலியல் தொல்லை கைதான தந்தை தற்கொலை