×

சீனாவில் மீண்டும் படையெடுக்கும் கொரோனா.. தொழில் நகரமான செங்டுவில் பொதுமுடக்கம் அமல்

பெய்ஜிங்: சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வருவதையடுத்து சிச்சுவான் மாகாணத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தபட்டுள்ளது. சிச்சுவானில் கடந்த 2 நாட்களில் 500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சென்டோ என்ற நகரத்தில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதையடுத்து வரும் 4ம் தேதி வரை நகரம் முழுவதும் கொரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு ஒருவர் மட்டுமே அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியில் வரலாம் என்று அறிவித்துள்ள நகர நிர்வாகம் கடைகளுக்கு வரும் அனைவருக்கும் 24 மணி நேரத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என்று கூறியுள்ளது. சீனாவில் தென்மேற்கு தொழில் நகரமான செங்டுவில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியின் பொருளாதாரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. சீனாவின் ஷென்ஸென், டாலியன் ஆகிய நகரங்களிலும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்துள்ள சீன சுகாதார அதிகாரிகள் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி செய்யுமாறு அறிவுறுத்தியிருக்கின்றனர்.  …

The post சீனாவில் மீண்டும் படையெடுக்கும் கொரோனா.. தொழில் நகரமான செங்டுவில் பொதுமுடக்கம் அமல் appeared first on Dinakaran.

Tags : China ,Chengdu ,BEIJING ,Sichuan ,Corona ,Dinakaran ,
× RELATED இந்தியா வருவதை தவிர்த்த எலான் மஸ்க் திடீர் சீன பயணம்