×

ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ-வாக இந்திய வம்சாவளி லக்ஷ்மன் நரசிம்மன் நியமனம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் சியாட்டிலை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஸ்டார்பக்ஸ்  கார்ப்பரேஷன் நிறுவனமானது சர்வதேச காஃபி ஹவுஸ் மற்றும் ரோஸ்டரி ஸ்டாக் நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி ஹோவர்ட் ஷூல்ட்ஸூக்கு பதிலாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லக்ஷ்மன் நரசிம்மனை (55) புதிய தலைமை நிர்வாகியாக ஸ்டார்பக்ஸ் நியமித்துள்ளது. இவர் வரும் அக்டோபர் 1ம் தேதி இந்நிறுவனத்தில் இணைவார். வரும் 2023ம் ஆண்டு ஏப்ரல் வரை ஹோவர்ட் ஷூல்ட்ஸ், நிறுவனத்தின் இடைக்கால தலைவராக இருப்பார் என்றும், அதன் பிறகு ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் வாரிய உறுப்பினராகத் தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பெற்க உள்ள  லக்ஷ்மன் நரசிம்மன், லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சப்-சஹாரா ஆப்பிரிக்கா ஆகிய இடங்களில் செயல்பட்ட நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றினார். இந்தியாவின் புனேவில் பிறந்த இவர், பிரிட்டிஷ் பிரதமரின் பில்ட் பேக் பெட்டர் கவுன்சிலில் உறுப்பினராகவும், வெரிசோனின் குழுவில் உறுப்பினராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது….

The post ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ-வாக இந்திய வம்சாவளி லக்ஷ்மன் நரசிம்மன் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Laxman Narasimhan ,Starbucks ,Washington ,Starbucks Corporation ,Seattle, USA ,
× RELATED X தளத்தில் புதிதாக இணையும் பயனர்கள்...