×

கேரளாவில் மழை தீவிரம்: 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில தினங்களாக  பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி உள்பட பல்வேறு மாவட்டங்களில்  தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. எர்ணாகுளம் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக  பெய்து வரும் கனமழையால் கொச்சி நகரமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. எர்ணாகுளம்  ரயில் நிலையத்தில் சூழ்ந்த வெள்ளம் காரணமாக தானியங்கி சிக்னலில் பழுது  ஏற்பட்டது. இதை தொடர்ந்து நேற்று முன்தினமும் ேநற்றும் பல ரயில்கள் ரத்து  செய்யப்பட்டன.  இதற்கிடையே கேரளாவில்  மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம்  அறிவித்துள்ளது. ேநற்று கேரளா முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் மஞ்சள்  எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் திருவனந்தபுரம் உட்பட 8 மாவட்டங்களுக்கு இது ஆரஞ்சு எச்சரிக்கையாக மாற்றப்பட்டது. இன்றும் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாலக்காடு மாவட்டம் மலம்புழா அணை முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து நேற்று திறக்கப்பட்டது. …

The post கேரளாவில் மழை தீவிரம்: 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Bathanamthitta ,Kottayam ,Ernakulam ,Idukki ,
× RELATED திருவனந்தபுரம் அருகே சாலையில்...