×

யுஎஸ் ஓபன் டென்னிஸ் 2வது சுற்றுக்கு முன்னேறினார் நடால்

நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் தகுதி பெற்றார். முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகடாவுடன் (21 வயது, 198வது ரேங்க்) மோதிய நடால் (36 வயது, 2வது ரேங்க்) 4-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். பின்னர் சுதாரித்துக்கொண்டு தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி ரிங்கியை திணறடித்த அவர் 6-2, 6-3, 6-3 என அடுத்த 3 செட்களையும் கைப்பற்றி 2வது சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 3 மணி, 8 நிமிடத்துக்கு நீடித்தது.மற்றொரு ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கரஸ் (19 வயது, 3வது ரேங்க்) தனது முதல் சுற்றில் 7-5, 7-5, 2-0 என முன்னிலை வகித்தபோது, எதிர்த்து விளையாடிய அர்ஜென்டினா வீரர் செபாஸ்டியன் பேஸ் (21 வயது, 37வது ரேங்க்) காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். முன்னணி வீரர்கள் யானிக் சின்னர், பேபியோ பாக்னினி (இத்தாலி), டீகோ ஷ்வார்ட்ஸ்மேன் (அர்ஜென்டினா), ஜான் ஐஸ்னர் (அமெரிக்கா), மரின் சிலிச் (குரோஷியா), ஆந்த்ரே ருப்லேவ் (ரஷ்யா), டெனிஸ் ஷபோவலாவ் (கனடா), கேம்ரான் நோரி (இங்கிலாந்து), போர்னா சோரிச் (குரோஷியா) ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.கார்னெட் கலக்கல்: மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இங்கிலாந்தின் எம்மா வாட்சனுடன் (19 வயது, 11வது ரேங்க்) மோதிய பிரான்ஸ் வீராங்கனை ஆலிஸ் கார்னெட் (32 வயது, 40வது ரேங்க்) 6-3, 6-3 என நேர் செட்களில் வென்று நடப்பு சாம்பியனுக்கு அதிர்ச்சி தோல்வியை பரிசளித்தார். மற்றொரு முதல் சுற்றில் களமிறங்கிய முன்னாள் நம்பர் 1 வீராங்கனை நவோமி ஒசாகா (24 வயது, 44வது ரேங்க், ஜப்பான்) 6-7 (5-7), 3-6 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் டேனியலி காலின்சிடம் (28 வயது, 19வது ரேங்க்) போராடி தோற்றார். இப்போட்டி 1 மணி, 34 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. முன்னணி வீராங்கனைகள் இகா ஸ்வியாடெக் (போலந்து), ஸ்லோன் ஸ்டீபன்ஸ், ஜெஸ்ஸிகா பெகுலா (அமெரிக்கா), கார்பினி முகுருசா (ஸ்பெயின்), விக்டோரியா அசரெங்கா (பெலாரஸ்), கரோலினா பிளிஸ்கோவா, மேரி பவுஸ்கோவா (செக் குடியரசு), பெலிண்டா பென்சிக் (சுவிஸ்) ஆகியோர் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்….

The post யுஎஸ் ஓபன் டென்னிஸ் 2வது சுற்றுக்கு முன்னேறினார் நடால் appeared first on Dinakaran.

Tags : Nadal ,US Open ,New York ,US Open Grand Slam ,Dinakaran ,
× RELATED பயணம் இன்னும் முடியவில்லை… நடால் நெகிழ்ச்சி