×

முதுமலை புலிகள் காப்பகத்தில் 3 நாள் போராட்டத்திற்கு பிறகு தாயை பிரிந்த குட்டி யானை தாயுடன் சேர்த்த வனத்துறை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மாவனல்ல வனப்பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக மாவனல்ல ஆற்றில் குட்டி யானை ஒன்று மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டது. இதனை அறிந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் வேட்டை தடுப்பு காவலர்கள் உதவியுடன் ஆற்றில் அடித்து வரப்பட்ட குட்டியானையை பத்திரமாக மீட்டனர். இதனை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக வனத்துறையினர், தாயின்றி தவித்து வந்த அந்த குட்டி யானையை தாயிடம் சேர்க்கும் முயற்சியால் 8 குழுக்களாக பிரிந்து மாவனல்ல,வாழைத்தோட்டம், ஆனைக்கட்டி உள்ளிட்ட பகுதிகளில் தாய் யானையை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்றிரவு பூபதி பட்டி மற்றும் காங்கிரஸ் மட்டம் ஆகிய பகுதிகளில் யானைகள் கூட்டமாக நின்று கொண்டிருப்பதையும், அதன் அருகே ஒரு பெண் யானை தனியாக இருப்பதையும் அறிந்த வனத்துறையினர் உடனடியாக குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது கூட்டத்தில் இருந்த ஆண் யானை ஒன்று வனத்துறையினரை விரட்ட முயன்றது. இதனை அறிந்த வனத்துறையினர் உடனடியாக குட்டியை விட்டுவிட்டு உடனடியாக அங்கிருந்து சென்ற நிலையில், தாய் யானையானது குட்டியை அழைத்து கொண்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றதாக வனத்துறையினர் தெரிவித்தார். மேலும் அந்த யானைகளை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

The post முதுமலை புலிகள் காப்பகத்தில் 3 நாள் போராட்டத்திற்கு பிறகு தாயை பிரிந்த குட்டி யானை தாயுடன் சேர்த்த வனத்துறை appeared first on Dinakaran.

Tags : Mudumalai Tiger Reserve ,Nilgiris ,Mawanalla ,Nilgiri ,Dinakaran ,
× RELATED தொடர் மழையால் பசுமைக்கு திரும்பிய முதுமலை புலிகள் காப்பகம்