×

பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா?

தாராளமாக அணியலாம். பஞ்சமுக ருத்ராட்சம் அணிவது நல்லது. மாதவிலக்கு நிற்காத இளம் வயது பெண்கள் ருத்ராட்சத்தை மாலையாக, அதாவது மார்புவரை நீளமாக அணியக் கூடாது. ‘கண்ட்டம்’, அதாவது கழுத்துவரை மட்டுமே, தனது மேலாடைக்குள் மறையாதவாறு, வெளியில் தெரியும்படியாக பஞ்சமுக ருத்ராட்சத்தை அணிந்து கொள்ள வேண்டும்.

இதே விதி ஆண்களுக்கும் பொருந்தும். தாம்பத்திய வாழ்க்கையில் இருக்கும் ஆண்கள் கழுத்து வரை மட்டுமே ருத்ராட்சத்தை அணிந்து கொள்ளவேண்டும். மற்றபடி விரத காலத்திலும், பூஜை செய்யும் நேரத்திலும் மட்டும்தான் ருத்ராட்சத்தை மாலையாக அணிந்து கொள்ள வேண்டும். மாதவிலக்கு நின்ற பெண்கள், தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடாத பட்சத்தில் சிவ தீட்சை பெற்று ருத்ராட்சத்தை மாலையாகவும் அணிந்து கொள்ளலாம். இதில் எவ்விதத் தவறும் இல்லை.

திருக்கோவிலூர் K.B. ஹரிபிரசாத் சர்மா

Tags : women ,Rudratsam ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...