×

காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு வெள்ளநீர் சாலையை கடந்து செல்வதால் போக்குவரத்து பாதிப்பு: ஒரே மாதத்தில் 3 முறை பாதிப்பு

திருவெறும்பூர்: காவிரி ஆற்றில் ஏற்பட்டு உள்ள வெள்ளப்பெருக்கு உத்தமர் சீலிக்கும் கவுத்தரசநல்லூருக்கும் இடையே உள்ள சாலையை கடந்து காவிரி ஆற்றில் இருந்து கொள்ளிடத்திற்கு வெள்ளநீர் வழிந்துசெல்வதால் போக்குவரத்து பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பியது. இதனால் உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் உபரிநீர் ரூ.1.40 லட்சம் கனஅடி நீர் முழுவதும் காவிரியில் திறந்து விடப்படுகிறது. அப்படி திறந்து விடப்படும் உபரிநீரால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழக முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது இந்த நாள் மழை நீரும் காவிரி ஆற்றில் சேர்ந்து காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வரும் வெள்ளநீர் திருச்சி முக்கொம்பு அணையில் இருந்து காவேரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் பிரித்து திறந்து விடப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி கல்லணைக்கு 50 ஆயிரத்து 21 கன அடி வந்து கொண்டு இருந்தது. அந்த தண்ணீரை காவிரியில் 3 ஆயிரத்து 9 கனஅடியும் வெண்ணாற்றில் 3 ஆயிரத்து 10, கல்லணை கால்வாயில் 2 ஆயிரத்து 17கன அடியும் கொள்ளிடத்தில் 41 ஆயிரத்து 985 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது ஏற்கனவே முக்கோம்பிலிருந்து கொள்ளிடத்தில் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 533கன அடி தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில் கல்லணையிலிருந்து 41 ஆயிரத்து 985 கனஅடியும் சேர்த்து ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 518கன அடி தண்ணீர் கொள்ளிடத்தில் செல்கிறது.இந்த நிலையில் காவிரி மற்றும் கொள்ளிட ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக உத்தமர் சீலி, கவுத்தரசநல்லூர், கிளிக்கூடு ஆகிய பகுதிகளில் பயிர் செய்யப்பட்டுள்ள வாழை பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. மேலும் செங்கல் தயாரிப்புகள் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் உத்தமர்சீலிக்கும், கவுத்தரசநல்லூருக்கும் இடையே திருவனைகோவில் கல்லணை சாலையை காவேரி ஆற்றில் இருந்து வெள்ளநீர் கடந்து கொள்ளிடம் ஆற்றில் கலப்பதால் பாஸ் போக்குவரத்து பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.ஒரு மாத காலத்தில் மட்டும் மூன்று முறை காவேரி மற்றும் கொள்ளிட ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக திருவனைக் கோவில் கல்லணை சாலை கடந்துகாவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் கொள்ளிடத்தில் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழலில் தண்ணீரில் மூழ்கியுள்ள வாழைப் பயிர்கள் அழுகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த இரண்டு முறை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மூழ்கிய வாழைப்பயிர்கள் அழிந்து நாசமாகி உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது….

The post காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு வெள்ளநீர் சாலையை கடந்து செல்வதால் போக்குவரத்து பாதிப்பு: ஒரே மாதத்தில் 3 முறை பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Cauvery river ,Thiruverumpur ,Cauvery ,Utthamar Seeli ,Gautharasanallur ,Dinakaran ,
× RELATED கரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 2 லாரி டிரைவர்கள் பலி