×

மாதவரம் மண்டலத்தில் உள்ள 4 மாநகராட்சி சுடுகாடுகளில் ஊழியரை நியமிக்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை

புழல்: சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலத்துக்குட்பட்ட 23வது வார்டு, புழல் காவாங்கரை கன்னடபாளையம் 24வது வார்டு, புழல் 31வது வார்டு, கதிர்வேடு ஆகிய 4 இடங்களில் சுடுகாடு உள்ளன. இங்கு காவலர், காப்பாளர் இல்லை. இங்கு சடலங்களை எரிக்கவோ, புதைக்கவோ வரும்போது மாநகராட்சி சம்பந்தமில்லாத தனி நபர்கள் பதிவு செய்து கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. எனவே இங்கே பல ஆண்டுகளாக சுடுகாட்டுப் பணியில் பணியாற்றி வரும் நபர்களை காப்பாளர்களாகவும், காவலர்களுக்கும் சம்பந்தப்பட்ட மாநகராட்சி உயர் அதிகாரிகள் நியமித்து இதற்கு ஒரு விதிமுறையை வெளியிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘இறந்து போனவரின்  சடலத்தை புதைப்பதற்கு சான்று வாங்குவதற்கு மாநகராட்சி சார்பில் உரிய அலுவலர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் தனி நபர்கள் ஏழை எளியவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். இதை தவிர்க்க மேற்கண்ட சுடுகாடுகளில் கட்டணங்களை எவ்வளவு என்பதை தெரியப்படுத்த வேண்டும். அப்படி தெரிவித்தால் நன்றாக இருக்கும். மேலும் சுடுகாடுகளில் ஈம சடங்குகள் செய்வதற்கு தண்ணீர் இல்லாமல் வெளியில் இருந்து எடுத்து வந்து செய்ய வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே மேற்கண்ட சுடுகாட்டில் தண்ணீர் வசதி மற்றும் குடிநீர் வசதிகளையும் செய்து தர சென்னை மாநகராட்சி உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என்றனர்….

The post மாதவரம் மண்டலத்தில் உள்ள 4 மாநகராட்சி சுடுகாடுகளில் ஊழியரை நியமிக்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Madhavaram ,Puzhal ,23rd Ward ,Madhavaram Mandal ,Chennai Corporation ,24th Ward ,Puzhal Kavankarai Kannadapalayam ,31st Ward ,Dinakaran ,
× RELATED மாதவரம் பால் பண்ணையில் இருந்து மொத்த...