×

பெங்களூருவில் விநாயகர் சதுர்த்தியை ஈத்கா மைதானத்தில் கொண்டாட தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: பெங்களூரு சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட மாநில அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பு வழங்கியது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் சாம்ராஜ்நகரில் உள்ள ஈத்கா மைதானம் யாருக்கு சொந்தம் என்பதில் மாநில அரசு மற்றும் கர்நாடக வக்பு வாரியம் இடையில் மோதல் உள்ளது. இந்நிலையில், ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட கர்நாடகா உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதற்கு எதிர்த்து பெங்களூரு நகர மாவட்ட வக்பு வாரிய நிர்வாகம் சார்பில் நேற்று முன்தினம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையிட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனு நேற்று காலை நீதிபதி ஹேமந்த் குப்தா தலைமையிலான அமர்வு முன் விசாரணை நடந்தது. வக்பு வாரியம் சார்பில் மூத்த வக்கீல் கபில்சிபிலும் கர்நாடக அரசின் சார்பில் துஷார்மேத்தாவும் ஆஜராகி வாதம் செய்தனர். இரு தரப்பு வக்கீல்கள் வாதம் கேட்டபின் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், ‘‘சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தின் உரிமையாளர் யார் என்பதில் தெளிவான ஆவணங்கள் இல்லை. மைதானம் மாநில அரசின் சொந்தமாகவோ, பெங்களூரு மாநகராட்சி சொந்தமாகவோ அல்லது வக்பு வாரியத்திற்கு சொந்தம் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. இந்த குழப்பமான சூழ்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதி வழங்குவது சரியாக இருக்காது. ஆகவே விழா நடத்த அனுமதி வழங்கி கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்கிறோம். மைதானத்தில் விழா எதுவும் நடத்தாமல் தற்போதுள்ள நிலை தொடர வேண்டும்’’ என்று தீர்ப்பு வழங்கினர். இந்த தீர்ப்பை தொடர்ந்து, அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்க நேற்று மாலை முதல் ஈத்கா மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 1,600 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்….

The post பெங்களூருவில் விநாயகர் சதுர்த்தியை ஈத்கா மைதானத்தில் கொண்டாட தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Vinayagar Chaturthi ,Eidgah ,Maidan ,Bengaluru ,Supreme Court ,New Delhi ,Karnataka High Court ,Vinayagar Chaturthi festival ,Eedha ,Samrajpet, Bengaluru ,
× RELATED பைக்கில் தவறிவிழுந்து விவசாயி பரிதாப பலி