×

ஹேமந்த் சோரன் அரசை கவிழ்க்க பாஜ குதிரை பேரம் ஜார்கண்ட் எம்எல்ஏக்கள் சட்டீஸ்கருக்கு மாற்றம்: தனி விமானத்தில் பயணம்

ராஞ்சி: ஜார்கண்ட் அரசை கவிழ்க்க பாஜவின் குதிரை பேரத்தை தடுக்க ஆளும்கட்சியை சேர்ந்த 40 எம்எல்ஏக்களை சட்டீஸ்கருக்கு தனி விமானம் மூலம் முதல்வர் ஹேமந்த் சோரன் அனுப்பி வைத்தார். ஜார்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்தாண்டு ஹேமந்த் சோரன், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சுரங்க குத்தகை ஒதுக்கீடு பெற்றதாக பாஜ குற்றம்சாட்டியது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஹேமந்த் சோரன் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதால் அவரது எம்எல்ஏ பதவியை பறிக்கும்படி, ஜார்கண்ட் ஆளுநருக்கு கடந்த வாரம் தலைமை தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது. இதையடுத்து ஹேமந்த் சோரனை ஆளுநர் ரமேஷ் பயாஸ் அதிகாரப்பூர்வமாக தகுதி நீக்கம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கூட்டணி கட்சி எம்எல்ஏ.க்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஹேமந்த் சோரன், 43 எம்எல்ஏக்களை ராஞ்சியில் இருந்து 30 கிமீ தொலைவில் குந்தி பகுதியில் உள்ள ரிசார்ட்டுக்கு 3 பேருந்துகளில் அழைத்து சென்றார். இந்நிலையில், ஆளும்கட்சி எம்எல்ஏக்களை குதிரை பேரம் மூலம் பாஜ இழுக்க முயற்சிப்பதாக முதல்வர் ஹேமந்த் சோரன் குற்றம்சாட்டி இருந்தார். பாஜவின் குதிரை பேரத்தை தடுக்க 40 எம்எல்ஏக்கள் தனி விமானம் மூலம் ராஞ்சியில் இருந்து சட்டீஸ்கர் தலைநகர் ராய்ப்பூருக்கு நேற்று மாலை 4.30 மணிக்கு முதல்வர் ஹேமந்த் சோரன் அனுப்பி வைத்தார். பின்னர், விமான நிலையத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இது ஒரு ஆச்சரியமான நடவடிக்கை அல்ல. அரசியலில் இது நடக்கும். எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்’’ என்று கூறினார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஜார்க்கண்ட் அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது….

The post ஹேமந்த் சோரன் அரசை கவிழ்க்க பாஜ குதிரை பேரம் ஜார்கண்ட் எம்எல்ஏக்கள் சட்டீஸ்கருக்கு மாற்றம்: தனி விமானத்தில் பயணம் appeared first on Dinakaran.

Tags : Jharkhand ,Chhattisgarh ,BJP ,Hemant Soran government ,Ranchi ,Jharkhand government ,Dinakaran ,
× RELATED ஈமக்கிரியை நிகழ்ச்சி: ஜார்க்கண்ட்...