×

பொருளாதார நிபுணர் அபிஜித் சென் மறைவு

புதுடெல்லி: பிரபல பொருளாதார நிபுணரும், முன்னாள் திட்ட ஆணையத்தின் உறுப்பினருமான அபிஜித் சென் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். நாட்டின் பிரபல கிராமப்புற பொருளாதார நிபுணர் அபிஜித் சென். இவர் மன்மோகன் சிங் பிரதமராக இரந்தபோது 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை திட்ட ஆணையத்தின் உறுப்பினராக இருந்தார். 2010ம் ஆண்டு இவருக்கு ஒன்றிய அரசு பத்மபூஷண் விருது வழங்கி கவுரவித்தது. 2104ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் நீண்ட கால தானியக் கொள்கையை உருவாக்குவதற்கான உயர்மட்ட பணிக்குழுவின் தலைவராக அபிஜித் சென் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தனது வீட்டில் இருந்த அபிஜித் சென்னுக்கு நேற்று முன்தினம் இரவு ெநஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்….

The post பொருளாதார நிபுணர் அபிஜித் சென் மறைவு appeared first on Dinakaran.

Tags : Abhijit Sen ,New Delhi ,Planning Commission ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு