×

8 வழி சாலை விவகாரம் என்பது கொள்கை முடிவு: தமிழக அரசு தான் முடிவெடுக்கும்.! மதுரையில் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

மதுரை: மதுரை கலைஞர் நூலக கட்டுமான பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறுகையில், ‘கலைஞர் நினைவு நூலகம் கட்டுமான பணி அக்டோபரில் நிறைவடையும். பணிகள் முழுமையாக நிறைவடைந்தவுடன் முதல்வருக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதன் பிறகு திறப்பு விழா பற்றி முதல்வர் முடிவு செய்வார். 8 வழி சாலை விவகாரத்தில் கடந்த ஆட்சியில் விவசாயிகளை நேரில் அழைத்து பேசவில்லை. 8 வழி சாலை விவகாரம் என்பது கொள்கை முடிவு. அமைச்சர் முடிவு எடுக்க முடியாது. தமிழக அரசு தான் முடிவெடுக்க முடியும். 8 வழி சாலை அமைக்க வேண்டும் என நான் பேட்டியும் தரவில்லை. அறிக்கையும் கொடுக்கவில்லை. கலைஞர் நூலகம் காலாகாலத்திற்கு நிலைத்து நிற்கும் வகையில் அதன் உறுதித்தன்மை உள்ளது. மதுரையில் மழை காலம் முடிந்ததும் அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும்’’ என்றார்….

The post 8 வழி சாலை விவகாரம் என்பது கொள்கை முடிவு: தமிழக அரசு தான் முடிவெடுக்கும்.! மதுரையில் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி appeared first on Dinakaran.

Tags : 8 ,Affair ,Government of Tamil Nadu ,Maduram ,Madurai ,Library ,. Velu, B. ,Moorthi ,Road Affair ,Minister ,Etb ,
× RELATED அடுக்குமாடி குடியிருப்பு...