சென்னை: ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ திரைப்படம் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரிலீசாகிறது. ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’. வாசன் விஷுவல் வென்சர்ஸ் சார்பில் கே.எஸ்.சீனிவாசன் இப்படத்தை தயாரித்து இருந்தார். ராஜேஷ்.எம் இயக்கியிருந்தார். 15 ஆண்டுகளுக்கு பிறகு மேலும் நவீன தொழில்நுட்ப மாற்றங்களுடன் இந்த படம் இம்மாதம் ரீ ரிலீசாகிறது.
ஆர்யா, சந்தானத்தின் காமெடிக்காவே இந்த படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அஜித், விஜய் ரசிகர்களை பற்றி சந்தானம் அடிக்கும் கமென்ட்டுகள், ஆர்யா-நயன்தாராவின் காமெடி கலந்த ரொமான்ஸ் காட்சிகளும் இப்படத்துக்கு பலமாக அமைந்தவை. படத்தை குரு சம்பத்குமாரின் அமிர்தா பிலிம்ஸ், தமிழகத்தில் 50க்கு மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிடுகிறது.