×

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பட்டியலிடும் நடைமுறையில் மாற்றம்; தலைமை நீதிபதி தகவல்

புதுடெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா ஓய்வு பெற்றார். இதையடுத்து கடந்த சனிக்கிழமையன்று புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்றார். 60 பொதுநலன் மனுக்கள் உள்பட 900 வழக்குகள் நேற்று உச்சநீதிமன்றத்தில்  விசாரணைக்கு வந்தன. தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ரவீந்திர பட் அடங்கிய பெஞ்ச் 62 மனுக்களை விசாரித்தது. அப்போது, நீதிமன்றத்தில் ஆஜரான ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா   வழக்குகளை பட்டியலிப்படுவதற்கான நடைமுறைகள் பற்றி கேட்டார். அதற்கு பதிலளித்த, தலைமை நீதிபதி,‘‘பதிவாளர் மூலம் வழக்குகள் பட்டியலிப்படுவது பழைய நடைமுறை ஆகும். அந்த முறையே கொண்டு வரப்படும். அதுவரை நீதிமன்றம் வாயிலாக வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும். அவசர வழக்குகள் முதலில் எடுத்து கொள்ளப்படும். 1ம் தேதி முதல் புதிய நடைமுறை  அமலுக்கு வரும்’’என்றார். …

The post உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பட்டியலிடும் நடைமுறையில் மாற்றம்; தலைமை நீதிபதி தகவல் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Chief Justice ,NV ,Ramana ,U.U. ,Lalit ,Dinakaran ,
× RELATED உச்ச நீதிமன்ற வழக்கு விவரம் வாட்ஸ்அப்...