×

கஜானாவில் காசு இல்லை தனியாருக்கு விற்கப்படும்; இலங்கை ஏர்லைன்ஸ் அமைச்சர் தகவல்

கொழும்பு: இலங்கை அரசுக்கு சொந்தமான ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் இயக்க பணம் இல்லாததால், தனியாருக்கு விற்க அரசு முடிவு செய்துள்ளது. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடி சிக்க தவித்து வருவதால், அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட கையில் பணம் இல்லாமல் தவித்து வருகிறது. இந்த சூழலில், இலங்கைக்கு முக்கிய வருமானமாக திகழ்ந்து வந்த சுற்றுலாத்துறை கடுமையாக முடங்கியதால், இதன் முக்கிய போக்குவரத்தான இலங்கை அரசு விமான சேவை கடுமையான சரிவை கண்டது. விமான சேவையை இயக்க கூட அரசிடம் பணம் இல்லை. இதனால், இலங்கை அரசு கட்டுப்பாட்டில் உள்ள விமான சேவையை தனியாருக்கு விற்க முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து, விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நிருபர்களிடம் கூறுகையில், ‘பணப்பற்றாக்குறை அரசாங்கத்தால் விமான சேவையை நடத்துவதற்கு இனி பணத்தை செலுத்த முடியாது என்பதால், நாட்டின் நஷ்டத்தில் இயங்கும் தேசிய விமான சேவையை தனியார்மயமாக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, லங்கன் விமான சேவையை மறுசீரமைக்கும் முயற்சியில் ஸ்ரீலங்கன் ஏர் லைன்சின் 49% பங்குகளை விற்க அரசு முடிவு செய்துள்ளது. 51% பங்குகள் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்….

The post கஜானாவில் காசு இல்லை தனியாருக்கு விற்கப்படும்; இலங்கை ஏர்லைன்ஸ் அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kazana ,Sri Lanka Airlines ,Minister ,Colombo ,Sri Lanka ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...